Leo – Lokesh: லியோ படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்போது ரிலீஸ்க்கு தயாராகி இருக்கிறது. ஒரு படம் வெளியாவதற்கு முன்பு சென்சார் போர்டுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த வகையில் லியோ படமும் தணிக்கை சான்றுதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில் படத்தில் எக்கச்சக்க கெட்ட வார்த்தைகள் இடம்பெற்றிருக்கிறது.
ஏற்கனவே லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் நிறைய வன்முறை காட்சி மற்றும் மோசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருந்தது. இப்போது அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு லியோ படத்தில் கெட்ட வார்த்தைகள் இடம்பெற்று இருக்கிறது. அதுவும் வன்முறை காட்சிகள் எக்கச்சக்கம் இருக்கிறது.
Also Read : விஜய்யை சீண்டிப் பார்க்கும் கலாநிதி.. லியோ போஸ்டரால் ஏற்பட்ட குழப்பம்
இதனால் செஞ்சாரையே காது கிழிய கதற விட்டிருக்கிறார் லோகேஷ். மேலும் லியோ படத்தில் பல வார்த்தைகளை மியூட் செய்ய சென்சார் போர்ட் உத்தரவிட்டிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் சில வார்த்தைகளை மாற்ற வேண்டும் என்றும் கூறியிருக்கிறது. மேலும் படத்தின் நீளமும் அதிகமாக இருக்கிறது.
அதாவது கிட்டத்தட்ட 2 மணி நேரம் 44 நிமிடங்கள் ஆகும். எப்போதுமே படத்தின் நீளம் அதிகமாக இருந்தால் சுவாரஸ்யம் சற்று குறைவாக இருக்கும். ஏனென்றால் மக்கள் இவ்வளவு நேரம் படத்தை பொறுமையாக பார்ப்பது மிகவும் கடினம். இதுவே லியோ படத்திற்கு பெரும் சிக்கலாக அமையவும் வாய்ப்பு இருக்கிறது.
Also Read : 100% ப்ரொபஷனல் சாரே.! மணிரத்தினம், ஷங்கரை மிரளவிடும் லோகேஷ்
அதோடு மட்டுமல்லாமல் விஜய்க்கு எப்போதுமே குடும்ப ஆடியன்ஸ் அதிகம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை விஜய்யின் படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு வருவதை பார்க்க முடியும். ஆனால் லியோ படம் முழுக்க முழுக்க லோகேஷின் படமாக உருவாகி இருக்கிறது. அதுவும் எக்கசக்க கெட்ட வார்த்தைகள் வேறு படத்தில் இடம் பெற்றிருக்கிறது.
இதனால் இந்த படத்தை குடும்ப ஆடியன்ஸ் கொண்டாடுவார்களா என்பது சந்தேகம் தான். வன்முறை காட்சிகளும் நிறைய இடம்பெற்று இருப்பதால் கண்டிப்பாக குழந்தைகளை பெற்றோர்கள் லியோ படத்தை பார்க்க அனுமதிக்க மாட்டார்கள். ஆகையால் வசூலிலும் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
லியோ படத்தின் போலி சர்டிபிகேட்

ஆனால் வேண்டுமென்றே லியோ படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வரவேண்டும் என்பதற்காக போலியான சர்டிபிகேட்டை பரப்பி வருகிறார்கள். மேலும் தயாரிப்பாளர் லலித் இது முற்றிலும் பொய்யான சர்டிபிகேட் என தெளிவுபடுத்தி இருக்கிறார். விஜய்யின் மார்க்கெட்டை உடைப்பதற்காக இவ்வாறு சதி வேலை நடந்திருக்கிறது.
Also Read : லியோவை ஓவர் டேக் செய்யும் வெங்கட் பிரபு.. தளபதி 68-ல் இணைந்த 10 பிரபலங்களின் லிஸ்ட்