வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் லியோ.. அர்ஜுனுடன் சம்பவத்தை முடித்த விஜய்

விஜய்யின் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இந்த படத்தின் பூஜை போடப்பட்டு ஜனவரி முதல் படப்பிடிப்பு துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுவாக லோகேஷ் இயக்கும் படங்கள் அனைத்தும் மின்னல் வேகத்தில் எடுத்து முடிக்கப்படும்.

அப்படிதான் விஜய்யின் லியோ படத்தின் படப்பிடிப்பையும் மளமளவென முடித்து வருகிறார் லோகேஷ். முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடத்தி முடித்துவிட்டு, தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதனால் மே மாத இறுதிக்குள் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்கும் முடிவில் உள்ளனர்.

Also Read: கொடூரமாக நடிக்கும் அர்ஜுன்.. இணையத்தில் லீக் ஆன லியோ படத்தின் முக்கிய கதாபாத்திரம்

ஆகையால் எங்கு பார்த்தாலும் தற்போது லியோ படத்தின் புதுப்புது அப்டேட் செய்திகள்தான் வைரலாக பேசப்படுகிறது. அதிலும் லியோ படத்தில் அர்ஜுன் விஜய்யுடன் வில்லனாக இணைந்து நடிக்கிறார். ‘ஏ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ திரைப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ஹெட் ஹாரிஸ் ‘கால் போகர்டி’ என்னும் பெயரில் மிக கொடூரமான வில்லனாக நடித்திருப்பது போல் அர்ஜுன் லியோவில் நடித்திருப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது

இந்நிலையில் லியோ படத்தின் படப்பிடிப்பு கடந்த 25 நாட்களாக சென்னையில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் அர்ஜுன் மற்றும் விஜய் இருவரின் போர்ஷன் முழுவதுமாக படமாக்கப்பட்டு விட்டது. அடுத்ததாக விஜய்யுடன் மன்சூர் அலிகான் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளனர். எனவே முக்காவாசி காட்சிகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், தற்போது கிளைமாக்ஸ் காட்சிகள் பரபரப்பாக எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

Also Read: ஆடு புலி ஆட்டத்திற்கு அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக போட்ட விஜய்.. என்னம்மா யோசிக்கிறாரு மனுஷன்

இதனால் இறுதி கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. அங்கு ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான ஏர்போர்ட் செட் அமைக்கப்பட்டு கிளைமேக்ஸ் காட்சிகளை எடுக்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சில தினத்தில் சென்னையில் படப்பிடிப்பை நிறைவு செய்து படக்குழு இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் விரைய உள்ளனர்.

எனவே வரும் அக்டோபர் 19ஆம் தேதிக்கு லியோ படத்தை ரிலீஸ் செய்ய இருக்கும் படக்குழு ஜெட் வேகத்தில் படப்பிடிப்பை முடித்து அடுத்ததாக படத்தின் ப்ரோமோஷனுக்காகத்தான் அதிக நேரத்தை செலவிடப் போகின்றனர். அதிலும் இந்தப் படத்திற்கு பாலிவுட் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருப்பதால், ப்ரமோஷனை மட்டும் சரியாக நடத்தி விட்டால் நிச்சயம் வசூல் 500 கோடியை அசால்டாக தாண்ட வாய்ப்பு இருக்கிறது.

Also Read: மனோபாலாவிற்கு லியோ டீம் செய்யப் போகும் சம்பவம்.. லோகேஷுக்கு கட்டளை போட்ட தளபதி

Trending News