திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அந்த மாவட்டங்களை குறி வைத்திருக்கும் லியோ.. பிறந்த நாளில் மதுரையில் நடக்கப் போகும் சம்பவம்

விஜய் தனது 49வது பிறந்த நாளை வரும் ஜூன் 22 ஆம் தேதி கொண்டாட இருப்பதால் இப்போதிலிருந்து தளபதி ரசிகர்கள் அதற்கு ஆயத்தமாகி கொண்டு இருக்கின்றனர். அவர்களை குஷி படுத்த வேண்டும் என இந்த முறை விஜய் தென் மாவட்டங்களான ஒரு இடத்தில் தரமான சம்பவத்தை செய்ய திட்டம் போட்டு இருக்கிறார். பெரும்பாலும் விஜய்யின் படங்களின் ஆடியோ லான்ச் எல்லாம் சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் தான் நடைபெறும்.

இதனால் தன்னுடைய ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் சென்னை கிளம்பி வருவது சிரமமாக இருக்கிறது. இதனால் தென் மாவட்டங்களான ராம்நாடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி போன்ற பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமாக வர நினைக்கும் ரசிகர்கள் அந்த பகுதியில் இருந்து சென்னைக்கு வருவதற்கான போக்குவரத்து சிரமங்களை மனதில் வைத்துக்கொண்டு பத்து பேர் கிளம்பினால் அதில் நான்கு பேர் மட்டுமே போய் வரலாம் என தங்களுக்குள்ளே முடிவெடுத்து மீதி பேர் இருந்து விடுகின்றனர்.

Also Read: மாநாடு பட வெற்றிக்கு வெங்கட் பிரபுவை விட இவர் தான் காரணமாம்.. தளபதி-68 தலை தப்புமா!

ஆனால் திருச்சி, மதுரை போன்ற மையப் பகுதியில் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தால் அது அவர்களுக்கு மிகவும் சவுரியமாக இருக்கும். ஆகையால் லியோ படத்தின் ஆடியோ லான்ச் நிச்சயம் தென் மாவட்டங்களில் மட்டுமே நடக்க வேண்டும் என படத்தின் தயாரிப்பாளரான லலித்திடம் திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம்.

இதனால் அவர்களும் முதலில் திருச்சியில் பொன்மலை உள்ள பெரிய மைதானத்தில் ஏற்பாடு செய்தனர். ஆனால் அங்கு பர்மிஷன் கிடைக்காததால், இப்போது மதுரையில் நடத்த 90% உறுதியானது. மதுரையில் உள்ள செம பேமஸான பகுதியான எம்ஜிஆர் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வரும் 22 ஆம் தேதி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை தளபதியின் பிறந்தநாள் அன்று நடத்த முடிவெடுத்துள்ளனர்.

Also Read: வெங்கட் பிரபுவுக்கு ஐஸ் வைத்த கீர்த்தி நடிகைகள்.. தளபதி ஓகே சொன்ன 3வது ஹீரோயின்

ஏற்கனவே மதுரகாரர்களின் ஆட்டம் தாங்காது. அதிலும் இப்போது அவர்களது ஊரிலேயே லியோ படத்தின் ஆடியோ லாஞ்ச் நடைபெறப்போகிறது என்றால் இன்னும் தாறுமாறாக ரகளை செய்ய காத்திருக்கின்றனர். இவ்வாறு ஒவ்வொரு முறையிலும் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும், அவர்களின் மனதை அறிந்தும் விஜய் செயல்படுவதால் தான், அவருக்காக எதுவும் இறங்கி செய்யக்கூடிய ரசிகர் கூட்டத்தை வசப்படுத்தி வைத்திருக்கிறார்.

மேலும் மதுரையில் நடக்க போகும் ஆடியோ லாஞ்ச்சில் நிச்சயம் விஜய்யின் குட்டி ஸ்டோரி இடம்பெறப் போகிறது. அதுமட்டுமல்ல அவரை நேருக்கு நேராக பார்ப்பதை நினைத்து தென் மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். நிச்சயம் லியோ படம் மட்டுமல்ல அந்தப் படத்தின் ஆடியோ லான்ச்சும் மறக்க முடியாத அளவுக்கு இருக்கப் போகிறது. அதேசமயம் இது விஜய்யின் அரசியல் நகர்வாக தெரிகிறது என்றும் சிலர் விமர்சிக்கின்றனர்.

Also Read: எளிதில் செட்டாகும் விஜய்.. பெரிய கேள்விக்குறியான விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த சம்பவம்

Trending News