வேற லெவல் பிரம்மாண்டத்துடன் தயாராகும் லியோ.. ஒரு நாளைக்கு மட்டும் இத்தனை லட்சம் செலவா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்தப் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மிகப் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் இதுவரை இல்லாத அளவுக்கு தயாரிப்பாளர் லலித் குமார் ஏகப்பட்ட பணத்தை தண்ணியாக செலவழித்து வருகிறாராம்.

தற்போது காஷ்மீரில் நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அளவுக்கு அதிகமான குளிரிலும் கூட படத்தின் சூட்டிங் இடைவிடாமல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஒட்டுமொத்த டீமும் எந்த பாகுபாடும் பார்க்காமல் ஒன்றாக களத்தில் இறங்கி உழைத்து வருவது தான்.

Also read: லியோவை ஓவர் டெக் செய்த மகிழ் திருமேனி.. அஜித்துக்கு வில்லனாகும் ரொமான்டிக் ஹீரோ

இன்னும் சொல்லப்போனால் தயாரிப்பாளர் கூட சக தொழிலாளியாக மாறி வேலை செய்து வருகிறாராம். மேலும் ஏராளமானோர் இதில் பணிபுரிந்து வருவதால் 24 மணி நேரமும் அங்கு அடுப்பு எரிந்து கொண்டே இருக்கிறதாம். அதனால் அனைவரும் நினைத்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். அந்த அளவுக்கு அங்கு வகை வகையான உணவு பதார்த்தங்கள் தயாராகிறதாம்.

இதற்கான செலவில் கஞ்சத்தனம் காட்டாத லலித் குமார் ஒரு நாளைக்கு மட்டுமே 75 லட்சம் ரூபாய் செலவழித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் இந்த அளவுக்கு பிரம்மாண்டமாக ஒரு திரைப்படம் உருவாகிறது என்றால் அதில் லியோவாக தான் இருக்க முடியும். இதனால் டெக்னீசியன்களும் படு உற்சாகமாக படப்பிடிப்பில் ஓடி ஆடி வேலை செய்து வருகிறார்கள்.

Also read: இப்ப புரியுதா அண்ணாச்சியோட பவர்.. விஜய், அஜித்தை தாண்டி முதல் இடத்தை பிடித்தாரா தி லெஜன்ட்.?

ஏனென்றால் அங்கு குளிர் அதிகமாக இருப்பதால் சூட்டிங் 11 மணிக்கு மேல் தான் தொடங்கப்படுகிறதாம். இதற்கு முக்கிய காரணம் லைட்டிங் போன்ற பிரச்சினைகள் தான். அப்போது தொடங்கும் படப்பிடிப்பு நான்கு மணி வரை இடைவிடாமல் நடக்குமாம். இப்படி சிரமமான நேரத்திலும் லோகேஷ் கனகராஜ் பக்காவாக படத்தை செதுக்கி கொண்டிருக்கிறார்.

இப்படி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் லியோ திரைப்படத்தின் ஒரு நாள் பட்ஜெட்டே கேட்பவர்களை தலைசுற்ற வைக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் ப்ரீ பிசினஸ் கோடி கணக்கில் வியாபாரமான நிலையில் நிச்சயம் படம் வெளியாகி வசூலை வாரிக்குவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதனாலேயே தயாரிப்பாளர் இப்படி கணக்கு பார்க்காமல் காசை செலவழித்து வருகிறார்.

Also read: அடி உதவுவது போல் அண்ணன், தம்பி உதவ மாட்டாங்க.! விஜய்யை பார்த்து கூட திருந்தாத சிவகார்த்திகேயன், தனுஷ்