செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சொல்றது ஒன்னு செய்யறது ஒன்னு.. மைக்கை பிடிச்சா கண்டபடி உளறும் லியோ பட வில்லன்

Leo: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. தற்போது ஷூட்டிங் வேலைகளை முடித்துள்ள லோகேஷ் இறுதி கட்ட வேலைகளை பரபரப்பாக செய்து வருகிறார்.

வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ள இப்படத்திலிருந்து வெளிவரும் அப்டேட்டுகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது. அதிலும் சமீபத்தில் சஞ்சய் தத் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான வீடியோ உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

Also read: மேடையில் கெட்ட வார்த்தை பேசிய மிஷ்கின்.. தத்துவம் சொல்றேன்னு பெயரைக் கெடுத்துக் கொண்டு செய்யும் அக்கப்போரு

இப்படி லியோ படத்திற்கான ப்ரமோஷன் படுவேகமாக நடந்து வரும் நிலையில் இப்படத்தில் நடித்திருக்கும் வில்லன் நடிகர் தேவையில்லாத விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் மிஷ்கின் லியோ படத்தின் வில்லன்களில் ஒருவராக நடித்திருப்பது அனைவருக்கும் தெரியும். பல பேட்டிகளில் அவரே இது குறித்து கூறியிருக்கிறார்.

அது மட்டுமின்றி பல மேடைகளில் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் கைத்தட்டலை வாங்குவதற்காக இவர் கண்டபடி உளறுவதும் வழக்கம் தான். அப்படித்தான் சமீபத்தில் இவர் கமர்சியல் படங்களை நான் பார்க்க மாட்டேன், எனக்கு அது பிடிக்காது என்று குறிப்பிட்டிருந்தார்.

Also read: அவரு சாப்பிட்டு உதறும் எச்ச பருக்கை தான் நான்.. இசையமைப்பாளராக புல்லரிக்க வைத்த மிஷ்கின்

இப்படி வாய்ச்சவடால் விடும் இவர் பல கமர்சியல் படங்களில் நடித்திருக்கிறார். அதேபோன்று அனைத்து விதமான படங்களையும் இவர் பார்ப்பதும் வழக்கம். ஆனால் மேடையில் மைக்கை பிடித்து விட்டால் மட்டும் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் சரளமாக எதையாவது அடித்து விடுவார்.

அதிலும் நான் ஒரு கலகலப்பான ஆள் என்று தன்னைத்தானே இவர் தற்பெருமையும் பேசிக்கொள்வார். அது மட்டும் இன்றி அனைவரையும் ஒருமையில் பேசும் இவர் மேடை நாகரீகம் தெரியாமல் பேசுவது சில விமர்சனங்களுக்கும் ஆளாகி இருக்கிறது. இப்படி சொல்றது ஒன்னு செய்றது ஒன்னு என இருக்கும் இந்த லியோ பட வில்லன் தற்போது படம் பற்றி எதையாவது பேசி ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Also read: லியோ ஆடியோ வெளியீடு, மண்ணை அள்ளிப் போட்ட லோகேஷ்.. திருப்பி கொடுக்க நினைத்த தளபதிக்கு விழுந்த அடி

Trending News