Leo: ஒன்னு ரெண்டு பிரச்சனைனா பரவால்ல எல்லாமே சர்ச்சைன்னா என்னதான் பண்ண முடியும். இப்படி ஒரு சூழலில் தான் லியோ சிக்கி தவித்து வருகிறது. ஏற்கனவே பல பிரச்சனைகளில் சின்னாபின்னமாகி வந்த இப்படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளை அலங்கரிக்க காத்திருக்கிறது. ஆனால் அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விஜய், லோகேஷ் கூட்டணியில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் லியோ சர்வதேச அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் படத்திற்கு எதிராக ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சினையாக கிளம்புவது பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது. அந்த வகையில் தற்போது லியோ தெலுங்கில் ரிலீஸ் ஆவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி இந்த உரிமையை பல கோடி கொடுத்து சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. ஆனால் டைட்டில் உரிமம் தொடர்பான பிரச்சனையில் படத்தை 20ம் தேதி வரை வெளியிடக் கூடாது என ஹைதராபாத் நீதிமன்றம் தற்போது தடை உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இதுதான் சோசியல் மீடியாவை பதற வைத்துள்ளது.
இருப்பினும் இந்த பிரச்சனையை முடிந்த அளவு விரைவாக தீர்த்து படத்தை வெளியிடவும் சித்தாரா டீம் முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் லியோ ரிலீஸ் ஆவதற்கு நாளை ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த விவகாரம் உச்சகட்ட பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் விஜய்க்கு தெலுங்கிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
அதுவும் லோகேஷ் கூட்டணியில் வெளியாக இருக்கும் லியோவை கொண்டாடுவதற்கு அவர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் திடீரென இப்படி ஒரு பிரச்சனை வந்திருப்பது ரசிகர்களை சோர்வடைய வைத்திருக்கிறது. இருப்பினும் இன்று மாலைக்குள் இந்த விவகாரம் சரி செய்யப்பட்டு அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியாக புதுப்புது பிரச்சனைகள் பூதாகரமாக கிளம்புவது பட குழுவையும் பதட்டப்பட வைத்திருக்கிறது. இருந்தாலும் லியோ ரிலீஸ் ஒட்டுமொத்த சர்ச்சைக்கான பதிலடியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆக மொத்தம் கடைசி நேரம் வரை பரபரப்பாகவே வைத்திருக்கும் லியோ வரும் 19ஆம் தேதி தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பிக்க இருக்கிறது என்பது மட்டும் உறுதி.