வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

உறைய வைக்கும் பனியில் உழைக்கும் லியோ டீம்.. காஷ்மீருக்கு கும்பிடு போட்டு வந்த மிஷ்கின் அறிக்கை

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இயல்பாகவே குளிர் பிரகாசமான காஷ்மீரில் இப்போது மைனஸ் டிகிரியில் குளிர் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் பட குழுவினர் அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

இருப்பினும் படப்பிடிப்பை முடித்து விட வேண்டும் என்று அனைவரும் ஒன்று சேர்ந்து உறைய வைக்கும் பனியிலும் உழைத்து வருகிறார்கள். ஏனென்றால் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு ஏற்கனவே வந்துவிட்டது. அதனாலேயே படப்பிடிப்பை மே மாதத்திற்குள் முடித்து விட வேண்டும் என்று லோகேஷ் திட்டம் போட்டு உழைத்து வருகிறார்.

Also read: கூரைய பிச்சுகிட்டு கொட்டும் காசு.. பல கோடிகளில் பிரம்மாண்ட வீட்டை வாங்கிய லோகேஷ்

அதன் பிறகு இறுதி கட்ட பணிகளை ஆரம்பித்தால் தான் குறிப்பிட்ட தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியும். அதனால் தான் கிட்டத்தட்ட 500 பேருக்கு மேல் காஷ்மீர் குளிரில் கடுமையாக உழைத்து வருகிறார்களாம். இந்நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் இயக்குனர் மிஷ்கின் தற்போது தன் காட்சிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பி இருக்கிறார்.

மேலும் அவர் லியோ படத்தில் நடித்தது குறித்த ஒரு அறிக்கையையும் வெளியிட்டு இருக்கிறார். அதில் மைனஸ் 12 டிகிரி குளிரிலும் படகுழுவினர் கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்து விட்டார்கள். ஸ்டண்ட் மாஸ்டர்கள் மிகச் சிறப்பாக ஒரு சண்டைக் காட்சியை படமாக்கினார்கள். அது மட்டுமல்லாமல் உதவி இயக்குனர்களும் கடுமையாக உழைத்தது என்னை ஆச்சரியப்பட வைத்தது.

Also read: விஜய் மறுத்த அந்த 2 விஷயங்கள்.. லோகேஷ் மற்றும் லலித்தை தூக்கி வாரி போட்ட சம்பவம்

அதில் தயாரிப்பாளர் லலித் ஒரு சக தொழிலாளியாகவே மாறி உழைத்துக் கொண்டிருந்தார். மேலும் லோகேஷ் ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குனராக மாறி ஒரு வீரனை போல் களத்தில் இயங்கியது என்னை ஆச்சரியப்படுத்தியது. அன்புத்தம்பி விஜய் உடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் நடித்ததும் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் லியோ டீமிலிருந்து முதல் ஆளாக மிஷ்கின் தன் காட்சிகளை முடித்துவிட்டு வந்துள்ளார். ஏற்கனவே காஷ்மீர் குளிரால் பல பிரபலங்கள் அவதிப்பட்டு வருவதாகவும், எப்போதடா படப்பிடிப்பு முடியும் என்ற ரீதியில் இருப்பதாகவும் கூறப்பட்டது. அதில் மிஷ்கின் முதல் ஆளாக காஷ்மீருக்கு கும்பிடு போட்டு வந்துள்ளார்.

Also read: விஜய் கேட்கிற சம்பளத்தை விட கொட்டிக் கொடுக்கும் 5 தயாரிப்பாளர்கள்.. தளபதி கால் சீட் மட்டுமே தேவை

Trending News