வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஜய்க்கு போட்டியாக புதிய கட்சியை பதிவு செய்த லியோ வில்லன்.. முதல்ல கல்யாணம் அப்பறமா First Night

Leo Villain registered a new party to compete with Vijay: கட்சி தொடங்குவதெல்லாம் இப்போது சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. அதிலும் நடிகர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் அரசியலில் கால் பதிப்பதை ஒரு கட்டாயமாகவே செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார்.

இது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் அவருக்கு போட்டியாக லியோ வில்லன் மன்சூர் அலிகான் தன்னுடைய புதிய கட்சியை பதிவு செய்திருக்கிறார். ஏற்கனவே தமிழ் தேசிய புலிகள் என்ற கட்சியை நடத்தி வந்த அவர் தற்போது அந்த கட்சியின் பெயரை ஜனநாயக தேசிய புலிகள் என மாற்றி இருக்கிறார்.

அதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கும் அவரிடம் பத்திரிகையாளர்கள் ஒரு சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதில் முக்கியமானது விஜய் கட்சி ஆரம்பித்திருக்கும் நிலையில் நீங்கள் அவருடன் இணைந்து செயல்படலாமே, எதற்கு தனி கட்சி? என்ற கேள்விதான்.

Also read: தளபதியின் இடத்தை பிடிக்க ஓவர் பில்டப்.. உடம்பை புண்ணாக்கிய சிவகார்த்திகேயன்

அதற்கு மன்சூர், நல்ல கேள்விதான் முதலில் கல்யாணம் ஆகட்டும், அதுக்கப்புறம் ஃபர்ஸ்ட் நைட் பத்தி பேசலாம் என்று கூறினார். மேலும் தன்னுடைய கட்சி சார்பாக பல்லாவரத்தில் விரைவில் மாநாடு ஒன்றை நடத்தப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

அது மட்டுமல்லாமல் நடிகர்கள் கட்சி தொடங்குவதில் எனக்கே உடன்பாடு கிடையாது. என்னை நான் ஒரு நடிகனாகவே நினைக்கவில்லை எனக் கூறிய அவர் விரைவில் தான் போட்டியிடும் தொகுதியை பற்றியும் கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் விஜய்க்கு போட்டியாக இறங்கியுள்ளார் என்றே பேசப்பட்டு வருகிறது.

Also read: ஆந்திராவின் மணிரத்தினத்துக்காக காத்துக் கிடக்கும் விஜய், சூர்யா.. போட்ட முதல்-ஐ காப்பாற்றி கொடுக்கும் இயக்குனர்

Trending News