திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விடாமுயற்சிக்கு நெருக்கடி கொடுக்கும் லியோ.. சூட்டிங் ஆரம்பிப்பதற்குள்ள பயத்தை காட்டிய ஹீரோ

இந்த வருட தொடக்கத்திலேயே பொங்கல் ஸ்பெஷல் ஆக விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு போன்ற இரண்டு படங்களும் நேருக்கு நேராக மோதி, பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கு மேல் இரண்டு படங்களும் வசூலித்தது. அதை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தில் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே ரிலீஸ் தேதியுடன் ப்ரொமோ வீடியோவை வெளியிட்டு தளபதி ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைப்பது. இந்த படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் வரும் ஆயுத பூஜை அன்று படம் ரிலீஸ் ஆகிறது. ஆனால் துணிவு படத்திருக்கும் பிறகு அஜித்தின் 62 ஆவது படமான விடாமுயற்சி படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார் என்ற முடிவெடுக்கவே பல மாதங்களானது.

Also Read: வெங்கட் பிரபுவுடன் இணையும் மாஸ் இயக்குனர்.. லியோவை மிஞ்சும் தளபதி 68 அப்டேட்

இதனால் லியோவுடன் விடாமுயற்சி நிச்சயம் மோதாது. ஆனால் விடாமுயற்சியின் சூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பே லியோ பயங்கர நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  ஏனென்றால் வாரிசு ரிலீஸ் ஆவதற்கு முன்பே லோகேஷ் உடன் இணையும் தளபதி 67 படம் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் மிகைப்படுத்தினர்.

அதேபோல லியோ வெளியாகுவதற்கு முன்பே இப்போது இணையத்தில் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது தளபதி 68 படத்தின் பரபரப்பான அப்டேட் தான். இந்த படத்தை வெங்கட் பிரபு மற்றும் சுதா கொங்கரா இரண்டு இயக்குனர்கள் இயக்குகின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

Also Read: தளபதி 68க்கு அவர் வேண்டவே வேண்டாம்.. வெங்கட் பிரபுவின் அடிமடியில் கைவைத்த விஜய்

இதனால் தளபதி 68 படத்திற்கு ஹைப்பை ஏற்படுத்தி விட்டனர். இது அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு பயங்கர நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறது. விடாமுயற்சி ஷூட்டிங் இன்னமும் துவங்கப்படவில்லை. ஆனால் விஜய் வாரிசு படத்தை முடித்துவிட்டு இப்போது லியோ படத்தையும் முடிக்கும் தருவாயில் இருக்கிறார்.

அடுத்ததாக தளபதி 68 படப்பிடிப்பிலும் இணைவதால், அந்த படம் விடாமுயற்சியுடன் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு தான் இப்போது தல, தளபதி ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. இப்படி எப்போதுமே விஜய்யின் அடுத்தடுத்த பட அப்டேட் துல்லியமாக வெளியாகி சோசியல் மீடியாவில் எப்போதுமே இவரைப் பற்றியே பேசும்படி செய்து கொண்டிருக்கிறார்.

Also Read: விஜய்யின் கண்டிஷனால் நொந்து போன வெங்கட் பிரபு.. மொத்த கனவையும் இப்படி சல்லி சல்லியா உடைச்சிட்டீங்களே!

Trending News