புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தளபதிக்கு பெரும் தலைவலி கொடுக்கும் லியோ பட சூட்டிங் .. மனக்கஷ்டத்தில் விஜய் எடுத்த முடிவு

எங்கு திரும்பினாலும் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் படம் என்றால் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படம் தான். ஏனென்றால் லோகேஷ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த விக்ரம் படத்தின் தாக்கம் மக்களிடம் எப்படி இருந்தது என்று அனைவரும் அறிந்ததே. அதே மாதிரி லியோ படத்தின் கதையும் மற்றும் அதில் விஜய் நடிப்பையும் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் காஷ்மீரில் அதிகமான குளிரில் மிகவும் அவதிப்பட்டு லியோ படத்தின் குழுவினர் எந்த அளவுக்கு கஷ்டத்தை அனுபவித்து இருக்கிறார்கள் என்பது அவர்கள் போடும் வீடியோ மூலம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனாலும் அந்த சூழ்நிலையில் 50% படப்பிடிப்பை முடித்து சென்னைக்கு திரும்பி விட்டார்கள்.

Also read: ரோலக்ஸை ஓவர்டேக் செய்ய லியோவில் களமிறங்கும் தனுஷ்.. மிரட்ட வரும் லோகேஷ்

இதனை அடுத்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரசாத் ஸ்டுடியோ மற்றும் விஜய் வீட்டில் நடைபெற்று வருகிறது. இதனை தெரிஞ்ச விஜய்யின் ரசிகர்கள் எப்பொழுதுமே பிரசாத் ஸ்டுடியோவை சுத்தி சுத்தி வருகிறார்கள். இதனால் அங்கே சூட்டிங் நடைபெற பெரும் இடையூறாக இருக்கிறது.

அத்துடன் விஜய்யை பார்க்கும் எண்ணத்தில் அவரை வட்டமிட்டு மொய்த்து கொள்கிறார்கள். இதனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் பெரிய தலைவலியுடன் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பிற்கு சென்று வருகிறார். அதனாலேயே பிரசாந்த் ஸ்டூடியோ விற்கு சூட்டிங் போகவேண்டும் என்றாலே அதிகளவில் வெறுத்து வருகிறாராம்.

Also read: மொத்த பேர் கண்ணிலையும் மண்ணைத் தூவிய லோகேஷ்.. மும்பையில் இருந்து ரகசியமாய் ஊடுருவிய வில்லன்

இதிலிருந்து தப்பிப்பதற்காக அவுட்டோர் ஷூட்டிங் வேண்டாம் என்று முடிவு எடுத்த விஜய் தற்போது மீண்டும் அங்கேயே போய் சூட்டிங் வைக்கலாம் என்று பிளான் பண்ணி வருகிறார். இதைக் குறித்து லோகேஷ் இடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் லோகேஷும் ஒரு சில காட்சிகள் வெளிநாடுகளில் வைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்து வைத்திருக்கிறார்.

இந்நிலையில் இவர்கள் இரண்டு பேருமே இப்படி யோசித்ததால் ஹைதராபாத் அல்லது வெளிநாடுகளில் சென்று சூட்டிங் செய்து விடலாம் என்று திட்டம் போட்டு இருக்கிறார்கள். இதுவுமே விஜய் விருப்பப்பட்டு எடுத்த முடிவு அல்ல. ரசிகர்களை சமாளிக்க முடியாமல் மனக்கஷ்டத்துடன் தான் இந்த மாதிரி முடிவை எடுத்திருக்கிறார்.

Also read: புது அவதாரம் எடுத்த லோகேஷ் கனகராஜ்.. பெரிய கேள்விக்குறியில் அடுத்தடுத்து கமிட் ஆன படங்கள்

Trending News