புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இப்படி வீடியோ போட்டு மானத்தை வாங்கனுமா? லியோ 1000 கோடி வசூல் இருக்கட்டும் இதுக்கு பதில் சொல்லுங்க விஜய்

லியோ சூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பே ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கிளப்பி ஒட்டுமொத்த மீடியாக்களின் கவனத்தையும் ஈர்த்தது. ஆனால் இப்போது ரிலீஸ் நாள் நெருங்கும் நிலையில் அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி ஒரு வழியாகி வருகிறது படக்குழு.

ஏற்கனவே ஆடியோ லான்ச் பிரச்சனை பூதாகரமாக வெடித்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள ஒரு வீடியோவும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது நா ரெடி பாடலுக்கு 1300 டான்சர்கள் விஜய் உடன் இணைந்து ஆடி இருந்தனர். முதல் சிங்கிளாக வெளிவந்த அந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read: விஜய்யை சீண்டிப் பார்க்கும் கலாநிதி.. லியோ போஸ்டரால் ஏற்பட்ட குழப்பம்

ஆனால் அதில் ஆடிய நடன கலைஞர்களுக்கு இப்போது வரை சம்பளம் செட்டில் செய்யப்படவில்லையாம். இது குறித்து ஏற்கனவே அரசல் புரசலாக செய்திகள் வெளிவந்திருந்தாலும் இப்போது சம்பந்தப்பட்ட ஒருவர் வீடியோ மூலம் எங்கள் சம்பளத்தை கொடுங்கள் என்று கெஞ்சி கேட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1300 டான்சர்களில் ஒருவரான ரியாஸ் அஹமத் அந்த வீடியோவில் தன்னுடைய அடையாள அட்டையையும் காண்பித்துள்ளார். அதைத்தொடர்ந்து நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் எங்களுக்கு சம்பளம் வந்து சேரவில்லை. எப்போது ஃபோன் பண்ணி கேட்டாலும் சரியான பதில் கிடைக்கவில்லை.

Also Read: லியோவை ஓவர் டேக் செய்யும் வெங்கட் பிரபு.. தளபதி 68-ல் இணைந்த 10 பிரபலங்களின் லிஸ்ட்

அதனால் லியோ டீம் விரைவில் இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதை தொடர்ந்து கமெண்ட்டுகளிலும் அந்தப் பாடலில் நடனம் ஆடியவர்கள் எங்களுக்கும் இதே நிலைதான் என்று குமுறி உள்ளனர். இதுதான் இப்போது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள லியோ 1000 கோடி வசூல் சாதனை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இப்படி பிரம்மாண்டமாக படத்தை எடுத்துள்ள தயாரிப்பாளர் அப்பாவி டான்ஸர்களை கவனிக்காமல் விட்டது என் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் விஜய்யும் இதன் மறைமுக தயாரிப்பாளர் என பேசப்பட்டு வரும் நிலையில் அவர் இதற்கான பதிலை சொல்ல வேண்டும் என்ற கண்டன குரல்களும் பரபரப்பை கிளப்புகின்றது.

Also Read: லியோவுக்கு மட்டும் தான் பிரச்சனைக்கு மேல பிரச்சனை.. அடுத்தடுத்து நேரு ஸ்டேடியத்தை ஆக்கிரமிக்கும் 4 படங்கள்

Trending News