திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பிரம்மாண்டமா ஒரு படம் பண்ணியாச்சு, கமர்ஷியலா ஒரு ஹிட் கொடுக்கலாம் வெங்கட்.. கட்டளையிட்ட விஜய்

வாரிசு படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமான கேங்ஸ்டர் ரோலில் இடம்பெறும் விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்திலும் கமிட்டாகி உள்ளார். இதனை குறித்து வெங்கட் பிரபுவிடம் விஜய் போட்ட கட்டளை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சமீப காலமாக விஜய் நடிக்கும் எல்லா படங்களும் சீரியஸான சப்ஜெக்ட்டில் தான் இருந்து வருகிறது. இவர் மேற்கொண்ட கேங்ஸ்டர் படங்கள் அனைத்தும் வசூல் ரீதியான வெற்றியை கொடுத்துள்ள நிலையில் தற்பொழுது ரொமான்ஸ் படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.

Also Read: த்ரிஷாவுக்கு போட்டியாக களம் இறங்கும் 90ஸ் ஹீரோயின்.. 20 வருடத்திற்கு பிறகு விஜய்யுடன் ஜோடி போடும் நடிகை

இவர் மேற்கொண்டு வரும் தாதா கேரக்டருக்கு மாறாக தற்பொழுது வெங்கட் பிரபு படத்தில் ஜாலியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வெங்கட் பிரபுவிடம் இது போன்ற கட்டளையை போட்டு வருகிறார் விஜய். பொதுவாக வெங்கட் பிரபு படங்கள் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது.

அந்த வகையில் விஜய்யும் அவருடன் இணைந்தால், பெரிதளவு இப்படம் காமெடியில் சக்சஸ் ஆகும் என்பது ரசிகர்களின் எண்ணம். ஆகவே பல எதிர்பார்ப்புகளை கொண்டு வரும் இப்படம் குஷி படத்தை போலவே எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம் வெங்கட் பிரபு.

Also Read: கிராமத்து மனம் மாறாமல் முத்தையா எடுத்த 5 படங்கள்.. சரக்கு குறைந்ததால் தியேட்டரில் ஈ ஓட்டும் காதர் பாட்ஷா

விஜய் மற்றும் ஜோதிகாவின் நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் கொடுத்த படம் தான் குஷி. இப்படம் மக்கள் இடையே நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதேபோல வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் இப்படமும் கமர்சியல் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விஜய் இருந்து வருகிறார்.

அவ்வாறு இருப்பின் இப்படத்தின் ஹீரோயின் யாராக இருக்க வேண்டும் என்ற தேடலும் இருந்து வருகிறது. குஷியில் இடம் பெற்ற ஜோதிகாவையே இப்படத்தில் நடிக்க வைக்கலாம் என்ற முடிவில் இருந்து வருகிறார் வெங்கட் பிரபு. கண்டிப்பாக இவர் யோசனை படத்திற்கு வெற்றி கொடுக்கும் எனில் அதற்கு ஜோதிகா ஒத்துக் கொள்ள வேண்டும் அல்லவா அவற்றை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Also Read: சினேகாவையே கவர்ச்சி காட்ட வைத்த 5 இயக்குனர்கள்.. செல்வராகவன் கொடுத்த மோசமான கதாபாத்திரம்

Trending News