செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

LGM Movie Review- தோனி, ஹரிஷ் கல்யாண் கூட்டணி ஒர்க் அவுட் ஆனதா? எல்ஜிஎம் முழு விமர்சனம் இதோ!

LGM Movie Review: தோனி கிரிக்கெட்டை பொருத்தவரையில் கேப்டன் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். பொதுவாக சினிமாவில் முதலீடு செய்ய பல பிரபலங்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் எம் எஸ் தோனி சொந்தமாக தோனி என்டர்டைன்மென்ட் என்று ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.

அதில் தன்னுடைய முதல் படமாக ஹரிஷ் கல்யாணை வைத்து எல்ஜிஎம் படத்தை தயாரித்து இருக்கிறார். ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு மற்றும் நதியா ஆகியோர் நடிப்பில் எல்ஜிஎம் படம் உருவாகி இருக்கிறது. லெட்ஸ் கெட் மேரீட் என்பதை சுருக்கமாக எல்ஜிஎம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Also Read : தானாகவே தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்ளும் தோனி.. முதல் படத்திலேயே வந்த பேராசை

ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா இருவரும் கண்டிஷன் பெயரில் 2 வருடம் பழகி வருகிறார்கள். இந்த பழக்கம் ஒரு கட்டத்திற்கு மேல் காதலாக மாறுகிறது. ஹரிஷ் கல்யாண் அம்மாவாக நதியா நடித்திருக்கிறார். தந்தையின்றி தனி ஆளாக ஹரிஷ் கல்யாணை வளர்த்திருக்கிறார் நதியா. மேலும் இவானா மற்றும் கல்யாண் காதலிப்பது இரு குடும்பத்திற்கும் தெரிய வருகிறது.

இதனால் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும் நிலையில் இவானா மீண்டும் ஒரு கண்டிஷன் போடுகிறார். இதற்கு ஹரிஷ் கல்யாண் ஒத்துக்கொள்ளாத காரணத்தினால் திருமணம் தடைபடுகிறது. அதன் பிறகு இரு குடும்பமும் சேர்ந்து ஒரு சுற்றுலா செல்கின்றனர். அங்கு நதியா மற்றும் இவானா இடையே வேடிக்கையான நிகழ்வுகள் நடைபெறுகிறது.

Also Read : யோகி பாபுவை செமையாய் கலாய்த்த தோனி.. இசை வெளியீட்டு விழாவில் நடந்த சம்பவம்

அதன் பிறகு ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா திருமணம் நடைபெறுகிறதா என்பதுதான் எல்ஜிஎம் கிளைமேக்ஸ். படம் முழுக்க காமெடி என்ற பெயரில் இயக்குனர் ஏதோ சில விஷயங்களை புகுத்திருக்கிறார். அதுவும் இரண்டாம் பாதியில் மோசமான காமெடி காட்சிகளாக இடம்பெற்று இருக்கிறது.

தன்னுடைய வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்படுவது லாஜிக் தான். ஆனால் மாமியாருடன் பழகி பார்க்க வேண்டும் என்று இவானா சொல்வது கொஞ்சம் ஓவர் தான். மொத்தத்தில் எல்ஜிஎம் படத்தின் மூலம் தோனி அகல கால் வைத்துள்ளார்.

சினிமாபேட்டை ரேட்டிங் : 2.25/5

Also Read : 90களில் மாடர்னாக கலக்கிய 6 நடிகைகள்.. நதியாவிற்கு டஃப் கொடுத்த ஹீரோயின்

Trending News