லிப்ரா ப்ரொடக்ஷன் தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு சீரியல் நடிகையான மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். வெள்ளித்திரையில் முதல் சின்னத்திரை வரை இவர்களது திருமணம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் யாரும் எதிர்பார்க்காத அளவு தற்போது இவர்களின் பேட்டி ட்ரெண்டிங்கில் உள்ளது. இதனால் பிரபல ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்ட இந்த புதுமண ஜோடியிடம் பேட்டி எடுத்து வருகின்றனர். அந்த வீடியோவை ஏராளமானோர் பார்த்து வருகின்றனர்.
Also Read : எனக்கு மகாலட்சுமிக்கும் 21 வயசு வித்தியாசமா.? கல்யாணத்திற்கு பின் ரவீந்தர் அளித்த பேட்டி
மகாலட்சுமி, ரவீந்தர் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம். இந்நிலையில் ரவீந்தர் குண்டாக இருப்பதால் இவர்களது திருமணத்தை பற்றி அதிக உருவ கேள்வி செய்து விமர்சிக்கப்படுகிறது. ஆனால் அதெல்லாம் அசால்ட்டாக உதறிவிட்டு ரவீந்தர் தினமும் ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் நேர்காணலில் வந்த ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மகாலட்சுமி ரவீந்தருக்கு முத்தம் கொடுத்திருந்தார். அதுமட்டுமல்லாமல் மகாலட்சுமிக்கு நான் ஒரு வாட்டர் பெட் என ரவீந்தர் கூறியிருந்தார்.
Also Read : நயன்தாரா ரேஞ்சுக்கு அலப்பறை.. மஞ்சள் தாலியுடன் ஹனிமூன் போட்டோவை வெளியிட்ட மகாலட்சுமி
அதை உணர்த்தும் விதமாக அவர் மீது மகாலட்சுமி உல்லாசமாக உறங்கும் புகைப்படத்தை ரவீந்தர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு பின்னால் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான என் மேல் விழுந்த மழைத்துளியே என்ற பாடலை வைத்திருந்தார். இந்த ரொமான்டிக் புகைப்படத்தை பார்த்த பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தாலும், சிலர் விமர்சித்து வருகிறார்கள்.

அதாவது வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்ட போது இது போன்ற ரொமான்டிக் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக இரவீந்தர் குற்றச்சாட்டுகள் வைத்திருந்தார். தற்போது இவரே இதுபோன்று ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாரே, ஊருக்கு தான் உபதேசமா என்று கூறி வருகிறார்கள்.
Also Read : அவ குளிக்க மாட்டா, நான் வாட்டர் பெட்.. உச்சகட்ட காதல் போதையில் மகாலட்சுமி ஜோடி