Vignesh Sivan: பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும் என்பார்கள். இந்த பழமொழி இப்போது விக்னேஷ் சிவனுக்கு பொருந்தி விட்டது. நானும் ரவுடிதான் என்ற பெரிய ஹிட் படத்திற்கு பிறகு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விக்னேஷ் சிவனுக்கு எந்த படமும் அமையவில்லை.
சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் டீசன்டான வெற்றியைப் பெற்றது. நயன்தாரா மற்றும் சமந்தா கூட்டணியில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் பெரிதாக மக்கள் மனதில் நிற்கவில்லை. அஜித்துடன் இணைய வேண்டிய படமும் அவர் கைவிட்டு போனது.
அஜித் போனா என்ன கமல் தயாரிப்பில் ஒரு படம் பண்ண போவதாக அறிவிப்பு வந்தது. லவ் டுடே படம் வெற்றிக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தில் இணைந்தார். யார் கண் பட்டதோ தெரியவில்லை கமல் இந்த கூட்டணியில் படம் தயாரிப்பதில் இருந்து விலகிக் கொண்டார்.
அத்தனைக்கும் காரணம் விக்னேஷ் சிவன் தானாம்
அதன் பின்னர் எல்ஐசி என்று தலைப்பிடப்பட்ட இந்த படத்தை லலித் தயாரிப்பதாக இருந்தது. அத்தோடு சேர்த்து எஸ் ஜே சூர்யா மற்றும் கீர்த்தி செட்டி இந்தப் படத்தில் இணைந்தார்கள். இந்த படத்துக்காக நடத்தப்பட்ட வொர்க் ஷாப் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியானது.
ஆனால் தற்போது இந்த படம் ட்ராப் ஆகி இருப்பதாக தெரிகிறது. தயாரிப்பாளர் உடன் ஏற்பட்ட பிரச்சனை தான் காரணம் என சொல்லப்பட்டாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. மேலும் இந்த படம் டிராப் ஆனதுக்கு விக்னேஷ் சிவன் தான் காரணம் என சொல்லப்படுகிறது.
படத்தின் மீது கவனம் செலுத்தாமல் ஜாலியாக குடும்பத்துடன் பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார். திருமணம் ஆன நாளில் இருந்தே விக்னேஷ் சிவன் மீது இந்த குற்றச்சாட்டு அதிகமாகவே எழுந்து வருகிறது. இதனால் தான் எல்ஐசி படமும் கைவிட்டு போயிருக்கிறது.
அது சரி தாகம் இருக்கிறவன் தானே தண்ணியை தேடி அலையனும். கோடி கோடியாக பொண்டாட்டி சொத்து சேர்க்கும் பொழுது இவர் ஏன் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும் என முடிவு செய்துவிட்டார் போல.