ஜெயம் ரவி 2003 ஆம் ஆண்டு தன்னுடைய சொந்த அண்ணன் மோகன் ராஜா இயக்கிய ஜெயம் படத்தில் நடித்தார். மாஸ் ஹிட் அடித்த அந்த படம் அன்றிலிருந்து அவருக்கு ஜெயம் ரவி என்ற பெயரை நிரந்தரமாக கொடுத்தது. அடுத்த படத்தில் இருந்து அந்தப் பெயருடனையே ஜெயம் ரவி என வலம் வந்தார்.
எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் என அடுத்தடுத்து சக்சஸ்ஃபுல் படங்கள் கொடுத்தாலும் அண்ணனுடைய தயவில் ரீமேக் படங்கள் நடிக்கிறார் அதனால் தான் ஹிட் கொடுத்து வருகிறார் என இவரைப் பற்றி ஒரு பேச்சு அடிபட்டது.
அதன்பின் தன்னுடைய கேரியரில் இரண்டாம் கட்டத்துக்கு சென்றார். சக்சஸ்புள் படங்கள் கொடுத்துக் கொண்டு இருந்தாலும், இரண்டாம் கட்டத்தில் இவரது படங்கள் முதலுக்கு மோசமில்லாமல் சென்று கொண்டு இருந்தது. இப்படி கொஞ்ச நாள் சினிமா கேரியரை ஓட்டி வந்தார்.
தற்சமயம் இவருக்கு எந்த படங்களும் கை கொடுக்கவில்லை பூமி, அகிலன், இறைவன், சைரன், பிரதர் என தொடர்ந்து இவர் தற்போது நடித்து வரும் படங்கள் எல்லாமே பிளாப்பாகியது. இவரது குடும்ப வாழ்க்கையிலும் இவருக்கு பல பிரச்சனைகள் வந்து விவாகரத்து வரை சென்று விட்டது.
ஜெயம் ரவி இப்பொழுது தன் பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டார். இனிமேல் இப்படித்தான் அவரது பெயர் எல்லா படங்களிலும் இடம்பெறும். இதற்கு முன்னர் நடிகர் அருண்விஜய்யும் தன் பெயரை மாற்றி உள்ளார்.அருண்குமார் என்ற பெயரை அருண் விஜய் என மாற்றிய பின் சக்சஸ் புல் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.