புதன்கிழமை, ஜனவரி 22, 2025

பிகில் படம் போல அடுத்த ஸ்போர்ட்ஸ் கதையுடன் ரெடியான விக்னேஷ் சிவன்.. கூட்டு சேரும் நயன்தாரா

ஏகே 62 படம் கைநழுவிய பிறகு விக்னேஷ் சிவனின் நடவடிக்கை கொஞ்சம் வித்தியாசமாகவே தான் தெரிகிறது. இவர் அடுத்ததாக விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் போல விளையாட்டு சம்பந்தப்பட்ட கதையுடன் ரெடியாகி இருக்கிறார். இதற்காக நயன்தாராவையும் கூட்டு சேர்த்துக் கொண்டு ஸ்டேடியம் ஸ்டேடியம் ஆக அலைந்ததன் பின்னணி தற்போது தெரியவந்துள்ளது.

அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க கூடிய படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கூடிய விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என சொல்லி, இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை.

Also Read: 5 வருடங்களாக ஆப்பு அடிக்கும் அட்லி.. மார்க்கெட்டை இழந்து தவிக்கும் நயன்தாரா

ஆனால் விக்னேஷ் சிவன் ஐபிஎல் மேட்ச் ஒன்று விடாமல் அனைத்தையுமே நயன்தாராவுடன் சென்று பார்த்து, அங்கு எடுத்துக்கொண்ட போட்டோக்களை பகிர்ந்து வந்தார். படம் எடுக்காமல் ஏன் இப்படி செய்கிறாய் என பல கமண்டுகள் வெளிவந்தன. விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் எதற்காக திடீரென்று கிரவுண்ட் கிரவுண்டாக சுற்றினார் என்பதன் காரணம் தற்போது தெரிகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்ற பவுலர் தீபக் சாஹர் இவரது தங்கை மால்டி சஹாரை தனது சொந்த தயாரிப்பில் தயாரிக்கும் படத்திற்கு ஹீரோயினாக புக் செய்துவிட்டார். இந்த படத்தை விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் போன்று ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட கதைக்களத்தில் படமாக்க திட்டமிட்டுள்ளார்.

Also Read: அஜித்தை பழிவாங்க நயன்தாரா எடுத்த புதிய முடிவு.. கெத்தை விட்டு மாஸ் ஹீரோவிடம் கேட்ட வாய்ப்பு

அடுத்து தோனியும் இவரும் விளம்பர படம் எடுக்கும் பொழுது நண்பர்களாக இருந்ததால், தோனி படங்களை தயாரிப்பு தொடங்கி விட்டார். இதனால் அவருடைய தயாரிப்பு நிறுவனத்தில் விக்னேஷ் சிவன் இயக்கும் படமும் இடம்பெற வேண்டும் என பெரிய ஹீரோவை கையில் வைத்துக்கொண்டு தோனியிடம் கதை சொல்லி படம் இயக்கப் போகிறார். அதுவும் மிகப் பெரிய பட்ஜெட் படமாக இருக்கும்.

இப்பொழுது விக்னேஷ் சிவன் கிரிக்கெட் மேட்சை பார்க்க சென்றதற்கு காரணம் அனைவருக்கும் விளங்குகிறது. தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டும் என்றுதான் புத்திசாலித்தனமாக கிரிக்கெட்டை பார்க்க சென்றுள்ளார்.

Also Read: 3 தயாரிப்பு நிறுவனத்திற்கு ஹிரவாக பிரதீப் ரங்கராஜன்.. செகண்ட் ஹீரோவாய் களமிறங்கும் விஜய் சேதுபதி

Trending News