வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

லோகேஷின் ஹிட் லிஸ்டில் லியோ இல்ல போல.. சோசியல் மீடியாவில் அப்பட்டமாக காட்டிய லோகி

Lokesh: லோகேஷ் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை வைத்து படங்களை இயக்கி வருகிறார். அதனாலயே தற்போது இவருடைய மார்க்கெட் ரேட் அதிகரித்து அனைவரது பேவரிட் இயக்குனராக மாறிவிட்டார். அதற்கு காரணம் இவர் எடுத்த மாநகரம் படம் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற பல படங்களை ஹாலிவுட் ரேஞ்சுக்கு கதையை வைத்து வெற்றி பெற்றிருக்கிறார். அத்துடன் விஜய்யை வைத்து லியோ படத்தை எடுத்து கடந்த வாரம் அனைத்து திரையரங்களிலும் ரிலீஸ் செய்தார். ஆனால் இப்படத்திற்கு ரொம்பவே எதிர்பார்ப்பு வைத்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு ரொம்பவே சூப்பர் என்று சொல்லும்படியாக இல்லாமல் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருந்தபோதிலும் விஜய் இதில் மாஸாக நடித்ததால் படத்தின் வசூலுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் திரையரங்குகளில் ஓடிக் கொண்டுதான் வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் லோகேஷ் செய்த ஒரு விஷயம் தற்போது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

அதாவது ட்விட்டர் அக்கவுண்டில் லோகேஷ் இயக்குனர் என்ற பக்கத்தில் மாநகரம், கைதி, விக்ரம், மாஸ்டர் போன்ற படங்களை அடையாளமாக காட்டியிருக்கிறார். அத்துடன் அதில் லியோவையும் ஆட் பண்ணி இருக்கிறார். ஆனால் இந்த விஷயம் இவர் செய்தது ஏதோ வேண்டா வெறுப்பாக பண்ணியது போல தான் தெரிகிறது.

ஏனென்றால் இவருடைய இன்ஸ்டா பக்கத்தில் லியோவை மென்ஷன் பண்ணவில்லை. ஒருவேளை எதிர்பார்த்த அளவிற்கு படம் போகாததால் அவருக்கு வெறுப்பாக இருக்கிறதா என்று தெரியவில்லை. எல்லா படத்தையும் அப்டேட் பண்ணி இருக்கும் லோகேஷ் லியோவை மட்டும் ஆட் பண்ணவில்லை.

அதாவது ஜெயிலர் படத்தின் வசூலை விட லியோ படம் ஆயிரம் கோடி வசூலை தொட்டுவிடும் என்று ரொம்பவே நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் போற போக்க பாத்தா பாதி கூட தேறாது. இதனால் அப்செட் ஆன லோகேஷ் அவருடைய அக்கவுண்ட் பேஜில் லியோவை விட்டுவிட்டார் போல. ஆனால் நடக்கிறது எல்லாம் பார்த்தா விஜய்யை ஒரு பகடைக்காயாக யூஸ் பண்ணிக்கிட்டு, அதன் பிறகு தலைவருக்கு வெற்றியை கொடுக்கிறார்களோ என்பது போல் தெரிகிறது. அந்த வகையில் தலைவர் 171 படம் ஜெயிலரை விட வசூல் சாதனை படைக்கப் போகிறது.

Trending News