சனிக்கிழமை, மார்ச் 15, 2025

ப்ரியா பவானியைப் போல் நம்மளும் டாப்ல வந்துடலாம்.. புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட 5 நடிகைகள்

Actor Priya Bhavani Shankar: சினிமாவிற்கு வர ஆசை இருக்காதா என்பதை உணர்த்தும் விதமாக தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் இருந்தவர்கள் தற்பொழுது சினிமாவில் நாட்டம் காட்டி வருகின்றனர்.

மேலும் தன்னை நிரூபித்துக் கொள்ள பல முயற்சிகளை கையாண்டு வருகின்றனர். இருப்பினும் ஒரு சிலருக்கே அதிர்ஷ்டம் கதவை தட்டுகிறது. அவ்வாறு புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாய் வாய்ப்புக்கு ஏங்கும் 5 நடிகைகளை பற்றி இங்கு காணலாம்.

Also Read: வேலியே பயிரை மேஞ்சா எப்படி? அம்மாவாக நடித்த நடிகையையும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்த முரட்டு ஹீரோ

உமா பத்மநாதன்: சிறிது காலம் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் அதன் பின் வணக்கம் தமிழகம் என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் பணியாற்றினார். மேலும் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் 30க்கும் மேற்பட்ட படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்திருக்கிறார். சினிமாவில் சாதிக்கும் எண்ணத்துடன் களம் இறங்கியவர்களில் இவரும் ஒருவர்.

பாத்திமா பாபு: தூர்தர்ஷன், ஜெயா டிவி போன்ற தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். அதன்பின் சினிமாவில் ஆர்வம் கொண்டு பல குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் சினிமா மீது கொண்ட ஆர்வம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.

Also Read: பாக்கியா, பழனிச்சாமி நிச்சயதார்த்தமா? என் பொண்டாட்டி எனக்கு மட்டும்தான் என தடுக்க நினைக்கும் கோபி

அனிதா சம்பத்: நியூஸ் 7, பாலிமர் டிவி, சன் டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பதாக பணியாற்றியவர். அதன்பின் சினிமாவில் ஆர்வம் கொண்ட இவர் சர்க்கார், காலா போன்ற படங்களிலும் செய்தி வாசிப்பாளராகவே நடித்திருப்பார். பின் தர்பார், இரும்பு மனிதன், டேனி போன்ற படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் இடம்பெற்ற இவர் தெய்வ மச்சான் என்ற படத்தில் ஹீரோயின் ஆக தன் சினிமா கனவை நிறைவேற்றிக் கொண்டு வருகிறார்.

திவ்யா துரைசாமி: ஒரு செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன்பின் மதில், குற்றம் குற்றமே எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் சப்போட்டிங் ரோலில் நடித்துள்ளார். மேலும் முன்னணி நடிகையாக ப்ரியா பவானி சங்கரை போல ஹீரோயினாக வேண்டும் என்ற ஆசையில் வேகமாக செயல்பட்டும் வருகிறார் ஆனாலும் வாய்ப்பு எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சீரியலில் நடித்த பின்பு படிப்படியாக முன்னேறி சினிமாவிற்கு வந்த 5 ஆர்டிஸ்ட்கள்.. வெள்ளி திரையில் ஜொலிக்கும் கவின் பிரியா

பிரியா பவானி சங்கர்: கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானவர். அதற்குப்பின் சினிமாவில் வாய்ப்பு பெற்று மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். அதன்பின் மான்ஸ்டர், யானை போன்ற படங்களில் ஹீரோயின் ஆகவும் இடம் பெற்ற இவர் அடுத்தடுத்து பிரபலங்களோடு நடிக்கும் வாய்ப்பையும் பெற்று வருகிறார்.

Trending News