ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஷாருக்கான் போல அட்லிக்கு வேற நடிகரை கோர்த்துவிட்ட விஜய்.. பொட்டி படுக்கையை கட்டிய ஆசைத்தம்பி

Atlee: அட்லி இயக்க கூடிய படங்கள் காபி கேட் என்று கூறினாலும் அவரிடம் இருக்கும் தனித் திறமையால் வசூல் அளவில் சாதனை படைக்கும் அளவிற்கு வெற்றி இயக்குனராக ஜொலித்து வருகிறார். எப்படி இங்கே விஜய்யை வைத்து மெர்சல், பிகில் படங்களை கொடுத்தார்.

அதே மாதிரி பாலிவுட்டிலும் ஷாருக்கானுக்கு ஜவான் படத்தைக் கொடுத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்து விட்டார். அந்த வகையில் ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் ஷாருக்கானுக்கு இப்படத்தின் மூலம் 1100 கோடி வசூலை வாரி குவித்தது.

அதாவது அட்லி இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும் பொழுது விஜய் தான் உனக்கான திறமையை நீ நாலா பக்கமும் பரப்ப வேண்டும் என்று சொல்லி பாலிவுட்டுக்கு அனுப்பி வைத்தார். அதே மாதிரி ஷாருக்கானையும் கைகாட்டி இவரை வைத்து ஒரு படத்தை வெற்றியாக கொடு என்று ஒரு கோடு போட்டு காட்டினார்.

அதே மாதிரி அட்லி மற்றும் ஷாருக்கான் கூட்டணி மாபெரும் வெற்றி கூட்டணியாக மாறிவிட்டது. இதனை அடுத்து மறுபடியும் விஜய் வைத்து படத்தை எடுக்கலாம் என்று திரும்ப இங்கே வந்தார். ஆனால் விஜய், தற்போது அரசியல் பணிகளில் ரொம்பவே பிஸியாக இறங்கி விட்டேன்.

அத்துடன் அதில் நிறைய பொறுப்பான வேலைகள் இருப்பதால் உன்னிடம் கமிட் பண்ணி விட்டு உன்னை இழுத்தடிக்க முடியாது என்று நைசாக சொல்லி அல்லு அர்ஜுனாவை கைகாட்டி விட்டார். அதாவது உனக்கு இருக்கும் திறமையை வைத்துக் கொண்டு பாலிவுட்டில் கொடி கட்டி பறந்து விட்டாய்.

விஜய் பேச்சை தட்டாமல் கேட்டு வரும் ஆசை தம்பி

அதே மாதிரி தெலுங்கிலும் உன்னுடைய புகழும் வெற்றியும் தெரிய வேண்டும். அதனால் நீ அல்லு அர்ஜுனாவை வைத்து ஒரு படம் பண்ணு என்று கூறிவிட்டார். அந்த வகையில் நீங்கள் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் அண்ணா என்று சொல்லி அட்லி தற்போது பொட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு அக்கட தேசத்திற்கு போய்விட்டார்.

ஆனால் அல்லு அர்ஜுனா இப்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் பிஸியாக இருப்பதால் இதை ரிலீஸ் பண்ணிவிட்டு நாம் இணையலாம் என்று அவருடைய சம்மதத்தையும் கொடுத்துவிட்டார். அந்த வகையில் இவர்களுடைய காம்போவில் கூடிய விரைவில் படம் உருவாகப் போகிறது.

எது எப்படியோ திறமை இருந்தால் நான் எங்கு வேண்டுமானாலும் பிழைத்துக்க முடியும் என்று அட்லியும் விஜய் சொன்ன பேச்சை தட்டாமல் கேட்டு வருகிறார்.

Trending News