500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் இந்த வாரம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. வரலாற்றை தெரிந்துகொள்ள விரும்பும் ரசிகர்கள் இந்தப் படத்தை திரையரங்கில் பார்க்க ஏற்கனவே முண்டியடித்துக்கொண்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் ஒரு டிக்கெட்டின் விலை கேட்கும் சாமானியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். திரையரங்கில் எப்பயாவது போய் நல்ல படத்தை பார்க்க விரும்பும் ரசிகர்களும், கண்டிப்பாக பொன்னியின் செல்வன் படத்தை பார்த்தாக வேண்டும் என ஆசைப்படுகின்றனர்.
Also Read: குந்தவை கொடுக்கும் ஓவர் அலப்பறை.. பொன்னியின் செல்வன் படத்தால் சம்பளத்தை உயர்த்திய திரிஷா
இதை தெரிந்துகொண்டு தியேட்டர் உரிமையாளர்கள் பிரமாண்ட படம் என்பதால் டிக்கெட்டும் பிரமாண்டமாக தான் இருக்கும் என்று தாறுமாறாக விலையை உயர்த்தி கொள்ளை அடிக்கின்றனர்.
பொன்னியின் செல்வன் படத்தின் பிரீமியம் டிக்கெட்டின் விலை ரூபாய் 1200, கிளாசிக் டிக்கெட்டின் விலை ரூபாய் 1000. இப்படி ஆயிரத்தைத் தொட்ட பொன்னியின் செல்வன் படத்தின் டிக்கெட்டின் விலை சிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் பிரீமியம் டிக்கெட்டுகள் முழுவதுமாக விற்று தீர்ந்து இருக்கிறது.
தற்போது கிளாசிக் டிக்கெட்டுகள் மட்டுமே மிக வேகமாக விற்று தீர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை பொன்னியின் செல்வன் 10 கோடிக்கும் மேல் டிக்கெட் விற்பனை நடந்திருக்கிறது. தமிழகத்தில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் ப்ரீமியர் காட்சியின் மூலமாக மட்டும் இதுவரை 4 லட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வசூலாகியுள்ளது. தற்போதிருக்கும் சூழலைப் பார்த்தால், படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல கோடி லாபம் பார்த்த பொன்னியின் செல்வன் அசால்டாக ஆயிரம் கோடியை பாக்ஸ் ஆபீஸில் குவிக்கும் என்பது நிச்சயம்.
Also Read: பொன்னியின் செல்வன் நடிகர், நடிகைகளின் சம்பள லிஸ்ட்.. அதிகமா கல்லா கட்டிய ஆதித்த கரிகாலன்!