வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விஜய், கமலை போல வாரி வழங்கிய வெற்றிமாறன்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் விடுதலை படக்குழு

இயக்குனர் வெற்றிமாறனின் படங்களை பொருத்தவரையில் எப்போதுமே எதார்த்தமான காட்சிகள் தான் இடம்பெறும். இதனால் தான் ரசிகர்களிடம் வெற்றிமாறனின் படத்திற்கு எதிர்பார்ப்பு எப்போதுமே நிலவி வருகிறது. இப்போது சூரியை கதாநாயகனாக வைத்து விடுதலை படத்தை இயக்கி உள்ளார்.

விடுதலை படம் திரையரங்குகளில் வெளியாகி நேர்மையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் வெற்றிமாறன் செய்த ஒரு விஷயம் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. அதுவும் விஜய், கமல் பாணியில் வெற்றிமாறன் ஒன்று செய்துள்ளார்.

Also Read : 6வது வெற்றியை கொடுக்குமா வெற்றிமாறனின் விடுதலை.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

அதாவது விஜய், கமல் போன்ற பிரபலங்கள் தங்கள் படம் வெற்றி அடைந்தவுடன் படக்குழுவுக்கு பரிசை வாரி வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் உலக நாயகன் கமல் விக்ரம் படம் மாபெரும் வெற்றியடைந்ததை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு காரும், உதவி இயக்குனர்களுக்கு பைக்கும் பரிசாக வழங்கினார்.

இப்போது வெற்றிமாறன் மற்றும் விடுதலை படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஆர் எஸ் இன்போடெயின்மென்ட் சேர்ந்து படக்குழுவினர்களுக்கு பரிசு வழங்கி உள்ளனர். அவர்களுடைய நீண்ட திட்டத்தில் அயராது உழைத்த படக்குழுவினர், தொழில்நுட்ப வல்லுநர்கள், கார்பென்டர்கள், பிளம்பர்கள், லைட் ஆபீசர்களுக்கு தங்க நாணயங்களை வழங்கியுள்ளனர்.

Also Read : விடுதலை பார்ட் 2-வில் ஹீரோ சூரி இல்ல.. கிளைமேக்ஸை வேற லெவலில் செதுக்கியிருக்கும் வெற்றிமாறன்

மேலும் விடுதலை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பையும் தூண்டி உள்ளது. இவ்வளவு நாள் காத்திருந்ததற்கு தரமான வெற்றி படத்தை வெற்றிமாறன் கொடுத்து உள்ளார் என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

இப்போது படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்தால் இன்னும் சில நாட்களிலேயே போட்ட வசூலை படக்குழு எடுத்துவிடும் என்று கூறப்படுகிறது. மேலும் இதுவரை காமெடி நடிகராக கலக்கி வந்த சூரி இந்த படத்தில் எப்படி நடித்திருப்பாரோ என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக அசத்தியிருந்தார்.

Also Read : முக்கியமான இந்த 7 காரணங்கள்.. மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய வெற்றிமாறனின் விடுதலை

Trending News