வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பாலிவுட்டை விட 5 தமிழ் படங்களின் மூலம் கல்லாகட்டிய போனி கபூர்.. கம்மி பட்ஜெட்டில் பெத்த லாபம்

பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் போனி கபூர் முதலில் தமிழ் ரசிகர்களுக்கு ஸ்ரீதேவியின் கணவராகவே தெரிந்தார். அதன் பின் சமீப காலமாகவே கோலிவுட்டில் வரிசையாக படங்களை தயாரித்து ரிலீஸ் செய்கிறார். அதிலும் சின்ன மீனை போட்டு பெரிய சுறாவையே போனி கபூர் பிடித்துக் கொண்டிருக்கிறார்

நேர்கொண்ட பார்வை: 2019 ஆம் ஆண்டு எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியான இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம் மற்றும் ஆண்ட்ரியா தாரியாங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சமூகத்தில் பெண்களை எந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்பதையும் அவர்களுக்கு விதிக்கப்படும் தடைகளை தகர்த்தெறியும் விதமாக பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படம் மிகக் குறைந்த பட்சத்தில் எடுக்கப்பட்டு பெத்த லாபம் பார்த்தது. அதிலும் போனி கபூர் அஜித்தை மட்டுமே டாப் நடிகராக இந்த படத்தில் தேர்வு செய்து மற்ற நடிகர்கள் எல்லாம் சின்ன சின்ன ஆக்டர் ஆக இருந்தாலும் இந்தப் படத்தை குறைந்த பட்ஜெட்டில் எடுத்து பெரிய லாபம் பார்த்துவிட்டார். சின்ன மீனு போட்டு போனி கபூர் பெரிய சுறாவையே பிடித்து விட்டார்.

Also Read: 3 முறை அஜித்தை தயாரித்தும், ஆணவம் வரல.. நம்பர் ஒன் விவகாரத்தை கையில் எடுத்த போனி கபூர்

நெஞ்சுக்கு நீதி: கடந்த ஆண்டு அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ரிலீஸ் ஆன நெஞ்சுக்கு நீதி திரைப்படம் ஒரு இந்திய குடிமகனுக்கு மதம், ஜாதி, இனம், பாலினம், பிறப்பு இடம் ஆகியவற்றின் அடிப்படையில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படக் கூடாது என்ற கருத்தினை வெளிப்படுத்தும் வகையில் உருவாகி இருந்தது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற இந்த படம் குறைந்த பட்சத்தில் அதிக லாபம் பார்த்தது.

வீட்ல விசேஷம்: கடந்த ஆண்டு இயக்குனர் ஆர் ஜே பாலாஜி மற்றும் என் ஜே சரவணன் இணைந்து இயக்கிய நகைச்சுவை குடும்ப படமாக வெளியான இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்தார். இதில் திருமண வயதில் உள்ள மகன்கள் இருக்கும்போதே தாய் கர்ப்பமாக இருந்தால் அதை இந்த சமூகம் எப்படி பார்க்கும் என்பதை உடைத்துக் கூறும் வகையில் படத்தின் கதை அமைந்திருந்தது. வயிறு குலுங்க சிரிக்க வைத்த இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது மட்டுமல்லாமல் திரையரங்களிலும் தாறுமாறாக ஓடி வசூலை வாரி குவித்தது.

Also Read: 3 முறை அஜித்தை தயாரித்தும், ஆணவம் வரல.. நம்பர் ஒன் விவகாரத்தை கையில் எடுத்த போனி கபூர்

வலிமை: நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு கடந்த ஆண்டு எச். வினோத் மற்றும் போனி கபூர் மறுபடியும் இணைந்து அஜித்தின் கூட்டணியில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இதில் அஜித், நகை பறிப்பு மற்றும் சட்டவிரோத இருசக்கர வாகன குழு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு சமூகத்தில் நிலவும் மிகப்பெரிய கொள்ளை கும்பலை வேரோடு அறுக்கும் வகையில் படத்தின் கதை அமைந்திருந்தது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் 150 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் 350 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது குறிப்பிடத்தக்கது.

துணிவு: எச். வினோத்-போனி கபூர்-அஜித் இவர்கள் மூவரும் 3-வது முறையாக இணைந்த துணிவு படம் இந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்குகளில் தாறுமாறாக வசூலை வாரி குவிக்கிறது. ரிலீஸ் ஆன ஒரே வாரத்தில் 150 கோடியை தாண்டிய துணிவு வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் விரும்பும் வகையில் ஓல்ட் கேரக்டரிலும் மாஸ் காட்டி இருக்கும் அஜித் துணிவு படத்தின் மூலம் தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகர் என தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

Also Read: இதுவரை பார்க்காத அஜித்தை இனிமேல் பார்ப்பீர்கள்.. துணிவு கேரக்டரை பற்றி க்ளூ கொடுத்த போனி கபூர்

இவ்வாறு இந்த ஐந்து படங்கள் தான் போனி கபூர் தயாரிப்பில் கம்மி பட்ஜெட்டில் அதிக லாபம் பார்த்த படங்களாகும். அதிலும் ‘பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே படம் எடுக்க வேண்டும் என நான் நினைப்பதில்லை’ என்று பலமுறை மீடியாவில் சொன்ன போனி கபூர் தொடர்ந்து மூன்று முறை அஜித்தை வைத்து கம்மி பட்ஜெட்டில் பெத்த லாபம் பார்த்திருக்கிறார்.

Trending News