புதன்கிழமை, ஜனவரி 15, 2025

GV Prakash: ஹீரோவாக ஜிவி பிரகாஷ் மொக்கை வாங்கிய கடைசி 10 படங்களின் லிஸ்ட்.. பத்துல ரெண்டு கூட தேறல

10 films where GV Prakash acted as hero: இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்பட்டால் உள்ளதும் போச்சுடா நொள்ள கண்ணா என்று சொல்வதற்கு ஏற்ப தான் ஜிவி பிரகாஷின் நிலமை இருக்கிறது. அதாவது மியூசிக் டைரக்டராக பல படங்களுக்கு இசையமைத்து பின்னணி பாடகராக மக்கள் மனதில் ஒய்யாரத்தில் இடம் பிடித்தார். அப்படிப்பட்ட இவருக்கு ஹீரோவாகவும் மாற வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.

அதனால் கிடைக்கும் படங்கள் நல்லா இருக்கோ இல்லையோ நடித்து விட வேண்டும் என்று இவரை தேடிப்போன படங்களில் எல்லாம் கமிட்டாகி நடித்துக் கொண்டே வந்தார். அப்படி இவர் நடித்த படங்கள் எதுவுமே சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு பெயர் வாங்கவில்லை. அதற்கு காரணம் இவர் நடித்த படங்களில் டபுள் மீனிங் வார்த்தைகள், முகம் சுழிக்கும் அளவிற்கு காட்சிகள், ஹீரோயின்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் மோசமான காட்சிகள் தான் படம் முழுவதும் இருக்கும்.

வந்து சுவடு தெரியாமல் போன படங்கள்

அதனாலேயே இவருடைய படத்திற்கு மக்களிடமிருந்து பெரிய வரவேற்பு கிடைக்காமல் போய்விட்டது. இருந்தாலும் அதையெல்லாம் பற்றி கவலை கொள்ளாமல் ஹீரோ என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்வதற்காக தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இதுவே இவருடைய திருமண வாழ்க்கை விவாகரத்து அளவிற்க்கு போனதற்குக் கூட ஒரு காரணமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

அப்படி இவர் ஹீரோவாக நடித்த படங்களில் கடைசியாக வெளிவந்த படங்கள் மக்களிடம் அதிகமாக மொக்கை வாங்கி இருக்கிறது. அது என்னென்ன படங்கள் என்றால் டியர், அடியே, ரேபில், ஐயங்கரன், கள்வன், செல்ஃபி, ஜெயில், Bachelor, வணக்கம் டா மாப்ள, 100% காதல் இந்த படங்கள் எல்லாம் எதற்காக நடித்தார் என்று தெரியாமலேயே கமிட் ஆகி நடித்த படம் போல் தான் இருக்கும்.

இப்படி இவர் நடித்த எந்த படங்களிலுமே சொல்லுகிற அளவுக்கு ஒன்று கூட வெற்றி பெறவில்லை. தனக்கு என்ன வருமோ அதை வச்சு முன்னுக்கு வராமல் அகல காலை வைத்தால் இப்படித்தான் தட்டு தடுமாற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதுல வேற இன்னும் புது படங்களில் நடிக்கும் வாய்ப்பே பெற்று நடித்துக் கொண்டு வருகிறார். இன்னும் அதில் எல்லாம் என்ன கூத்து இருக்கப் போகிறதோ பார்க்கலாம்.

Trending News