புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கொஞ்சம் கொஞ்சமாக பாக்கியா மீது சாயும் கோபி அங்கிள்.. கேள்விக்குறியாக போகும் ராதிகாவின் நிலைமை

Bhakkiyalakhsmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா தனக்கு இணையானவள் இல்லை என்று கோபி ஒதுக்கினார். ஆனால் தற்போது அவர போலவே வர ஆசைப்படுகிறார். இதுதான் சொல்வார்கள் எல்லாத்துக்கும் காலம் பதில் சொல்லும் என்று. கோபி என்னதான் பல தில்லாலங்கடி வேலைகளை பார்த்தாலும் பிள்ளைகள் மற்றும் அம்மா என்று வரும்போது எப்போதுமே தனி பாசத்தை கொட்டக்கூடியவர்.

இப்படி இருக்கும் பொழுது தன்னை நம்பி வந்த அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்றதும் துடிதுடித்துப் போய்விட்டார். அதனால் ஈஸ்வரிடம் தற்போது பாக்யாவுடன் நீங்கள் போய்விட்டால் அந்த குற்ற உணர்ச்சியிலேயே நான் காணாமல் போய்விடுவேன். அதனால் எனக்கு மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள். கண்டிப்பாக உங்களை நன்றாக பார்த்துக் கொள்வேன் என்று கெஞ்சுகிறார்.

ராதிகாவை கண்டுக்காத கோபி

வழக்கம் போல் ஈஸ்வரி, கோபியை நம்பி அவருடனே வீட்டிற்கு கிளம்புகிறார். பிறகு அம்மாவை நடைப்பயிற்சிக்கு கோபி கூட்டிட்டு வரும்போது அந்த வழியாக பாக்கியா ஹோட்டலுக்கு போகிறார். போகும் போது அத்தையை பார்த்ததால் நான் போயிட்டு வருகிறேன் என்று சொல்லி விடுகிறார். இதை பார்த்த கோபி, அம்மாவிடம் இவ்வளவு சீக்கிரமாக ஹோட்டலுக்கு கிளம்பிப் போன வீட்டில் உள்ளவர்களை யார் பார்ப்பா என்று கேட்கிறார்.

அதற்கு ஈஸ்வரி அவர்களுக்கு வேணுங்கத செய்த பின் தான் பாக்கியா ஹோட்டலுக்கு போவார். எல்லா வேலையும் ஒத்த ஆளாக நின்னு சமாளிக்கும் திறமை அவளிடம் இருக்கிறது என்று சொல்கிறார். இதை கேட்டதும் பாக்யாவால் முடியுது என்னால முடியாதா என்று அவ்வை சண்முகி மாதிரி வீட்டு வேலையும் ஹோட்டல் வேலையும் ஒரே நாளில் சரிவர செய்து முடித்து அசத்துகிறார்.

இதற்கிடையில் அம்மாவை மருத்துவமனையில் பாக்கியா கவனித்த விதம் கோபி மனதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகிறது. கொஞ்சம் கரிசனையும் வந்து பாக்யாவிற்கு டீ, காபி கொண்டு போய் கொடுக்கும் அளவிற்கு கோபி மனதில் மாற்றம் ஏற்படுகிறது. ஆனாலும் இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பதற்கு ஏற்ப பாக்யா, கோபியை கண்டுக்கவே இல்லை.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பாக்யாவை மாதிரி ஒரு பொறுப்பானவராக இருக்க வேண்டும் என்று கோபி ஆசைப்படுகிறார். அதனால் ராதிகா பேச வந்தபோது கூட அவருக்கு நேரம் செலவழிக்காமல் வேலை மட்டுமே பார்த்து வருகிறார் கோபி. இப்படியே போனால் ராதிகாவின் நிலைமை கேள்விக்குறியாகும். அல்லது ராதிகாவே, கோபி வேண்டாம் என்று விட்டு விட்டுப் போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. காலம் கடந்த பின்பு தான் பாக்யாவின் அருமை கோபிக்கு புரிய வருகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News