வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய்க்கு தம்பியாக நடிக்க இருந்த வாய்ப்பை நழுவ விட்ட குட்டி பார்த்திபன்.. அதனாலயே காணாமல் போன பரிதாபம்

லோகேஷ் இயக்கத்தில் தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் லியோ திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து அப்டேட்டுகள் வெளியாக நிலையில் எங்கு பார்த்தாலும் லியோ படத்தினை பற்றி தான் பேசி வருகிறார்கள். அதனால் அதிக எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில் இப்படத்தை இந்த வருட இறுதியில் வெளியிடுவதற்காக முடிவு எடுக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளியான படங்களில் அவருக்கு சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்திய படம் என்றால் நிறைய சொல்லலாம். ஆனால் அவருக்கு பெரிய மாஸ் ஹீரோவாக ஹிட் கொடுத்த படம் கில்லி தான். இதில் காமெடி, காதல், செண்டிமெண்ட், ஆக்சன் என அனைத்தும் கலந்த படமாக அமைந்திருக்கும். அதேபோல் இதற்கு வில்லன் கேரக்டரில் பிரகாஷ்ராஜின் கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது.

Also read: விஜய்யுடன் நடித்து முன்னேற துடித்த வாரிசு நடிகர்.. 10 நிமிட காட்சியோடு துரத்தி விட்ட லோகேஷ்

அதுமட்டுமின்றி கில்லி படத்தில் விஜய் மற்றும் திரிஷாவின் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆனதால் அடுத்தடுத்த படங்களில் இணையும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் கில்லி திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்போதும் கில்லியே தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் தொடர்ந்து பார்க்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அடுத்ததாக விஜய்க்கு தங்கச்சியாக ஜெனிபர் நடித்திருப்பார். ஆனால் அவருக்கு பதிலாக இயக்குனர், தம்பி கேரக்டர் தான் நடிக்க வைக்க வேண்டும் என்று குட்டி பார்த்திபனை அழைத்திருக்கிறார். இவரை வைத்து தான் சில காட்சிகள் தம்பி கேரக்டரில் முதலில் எடுக்கப்பட்டது. அதன் பின் தான் இயக்குனருக்கு தோன்றியது எப்பொழுதுமே ஒரு வீட்டில் ஒரு அண்ணன் இருக்கிறான் என்றால் அதற்கு எதிர்மறையாக தங்கச்சி இருந்தால் செண்டிமெண்டாக ஒர்க் அவுட் ஆகும்.

Also read: பொன்னியின் செல்வனில் குந்தவை வாங்கிய மொத்த சம்பளம்.. பீல்ட் அவுட் ஆகியும் இவ்வளவு கோடியா?

அதனால் தம்பி கேரக்டரை தூக்கிவிட்டு அதன் பின்பு தான் தங்கச்சியாக ஜெனிபரை நடிக்க வைத்திருக்கிறார். இதை இயக்குனர், குட்டி பார்த்திபனிடம் சொன்னபோது அவர் ரொம்பவே கேஷுவலாக எடுத்துக் கொண்டு ஒகே சார் வேறு ஏதாவது வாய்ப்புகள் இருந்தால் சொல்லுங்கள் என்று கிளம்பிவிட்டார். அதேபோல நடிகர் பார்த்திபன் இரவின் நிழல் படத்திற்காக இவரை கூப்பிட்டு இருக்கிறார்.

பிறகு அவரைப் பார்த்து நீ இன்னும் பெரிய பையன் தோரணையில் இல்லை என்று கூறியிருக்கிறார். அதற்கு அவர் உங்க கதைக்கு ஏற்ற கேரக்டர் நான் இல்லை என்றால் அதை ஓபன் ஆக சொல்லிருங்கள் அதை விட்டுட்டு என்னைப் பற்றி நீ இன்னும் வளரவே இல்லை என்று எதிர்மறையாக பேசாதீர்கள் என்று கூறி கிளம்பிவிட்டார். அந்த குட்டி பார்த்திபன் வேறு யாருமில்லை அழகி படத்தில் பார்த்திபனுக்கு பதிலாக சிறு வயது இளைஞராக வரும் சதீஷ் ஸ்டீபன் தான்.

Also read: 2022ஆம் ஆண்டு வெளியான ஐந்து ‘A’ சர்டிபிகேட் படங்கள்.. சென்சார் போர்டை குஜால் ஆக்கிய பார்த்திபன்

Trending News