Nithyananda : நித்தியானந்தா பல சர்ச்சைகளில் சிக்கி இருந்த நிலையில் கைலாசாவில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. கைலாச எங்கு இருக்கிறது என இணையவாசிகள் சல்லடை போட்டு தேடினர்.
இப்படி இருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நித்யானந்தா உயிர் தியாகம் செய்து விட்டதாக கூறப்படுகிறது. அதை நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் தான் கூறியிருந்தார்.
இது அவரது பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதை அடுத்து ஏப்ரல் மூன்றாம் தேதியான இன்று காலை 4.39 மணிக்கு நேரலையில் வந்து பேசினார். நான் ஆரோக்கியமாகவும் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் என்று கூறினார்.
நித்தியானந்தா கொடுத்த நேரலை பேட்டி
அதோடு ஆன்மீக AI செயலியை உருவாக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறேன். அதனால் தான் நேரலையில் வருவதை குறைத்து கொண்டேன். என்னை பற்றியும் கைலாசவை பற்றியும் எந்த கேள்வி வேண்டுமானாலும் என்னை கேட்கலாம்.
எப்போதுமே உங்களுக்கு பதில் தர காத்துக் கொண்டிருக்கிறேன். யாரும் என்னை நினைத்து அச்சப்பட வேண்டாம் என்று நித்தியானந்தா கூறி இருக்கிறார். இதைக் கேட்டு அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
நித்யானந்தா இறந்ததாக நினைத்துக் கொண்டிருந்த அவர்களுக்கு இது இன்ப அதிர்ச்சியாக தான் இருந்திருக்க கூடும். மேலும் அவர் இறந்ததாக பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.