தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக இருந்தவர் லிவிங்ஸ்டன். இவர் 1988 இல் பூந்தோட்ட காவல்காரன் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்த லிவிங்ஸ்டன் அதன்பிறகு நகைச்சுவைக் கதாபாத்திரம் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
சுந்தர புருஷன் : 1996-ல் லிவிங்ஸ்டன் மற்றும் ரம்பா நடிப்பில் வெளியான திரைப்படம் சுந்தர புருஷன். இப்படத்தின் திரைக்கதையை லிவிங்ஸ்டன் எழுதி இருந்தார். குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடத்தி வந்த லிவிங்ஸ்டன் முதல் முறையாக கதாநாயகனாக நடித்த படம் இது. இப்படத்தில் உதவி இயக்குனராக எஸ் ஜே சூர்யா பணியாற்றியிருந்தார்.
சொல்லாமலே : சசி இயக்கத்தில் 1998 இல் வெளியான திரைப்படம் சொல்லாமலே. இப்படத்தில் லிவிங்ஸ்டன், கௌசல்யா, கரண் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் லிவிங்ஸ்டன், நடராஜ் என்ற கதாபாத்திரத்தில் நேர்மையான கிராமத்துக் கலைஞராக நடித்திருந்தார். சொல்லாமலே படம் லிவிங்ஸ்டனுக்கு பாராட்டை வாங்கி தந்தது.
என் புருஷன் குழந்தை மாதிரி : ராஜ் குமார் இயக்கத்தில் 2001ல் வெளியான திரைப்படம் என் புருஷன் குழந்தை மாதிரி. இப்படத்தில் லிவிங்ஸ்டன், தேவயானி, விந்தியா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இப்படத்தில் படிப்பறிவற்ற கிராமத்து ஜமீன்தார் முருகேசன் என்ற அப்பாவி கதாபாத்திரத்தில் லிவிங்ஸ்டன் நடித்திருந்தார்.