இளையராஜா சாதாரணமாக ஒரு ஆன்மீகவாதி எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் நேரடியாக பேசக்கூடியவர். இவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு தன் கோபத்தினால் மனதில் பட்டதை கூறுபவர். இவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் என்றால் ஏதோ ஒன்று கலவரத்தில் முடியும் அளவிற்கு பேசக்கூடியவர்.
இப்படி இருக்க இளையராஜா கோபம் மக்களிடம் அவர் ஒரு சைக்கோவாக கொண்டு சேர்த்தது. இருந்தாலும் மக்கள் அவர் மேல் மரியாதையுடன் இருந்து வருகின்றனர். அதற்கு காரணம் அவரது இசை. இளையராஜா, கங்கை அமரன், யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, 3 தலைமுறைகளாக இசைக்காக வாழ்ந்து வருகிறார்கள்.
இளையராஜா தற்போது படங்களுக்கு இசையமைப்பது குறைவு என்றாலும் அவரது பாடல்கள் மட்டுமே இன்றைய காலகட்டத்திலும் அனைத்து தரப்பினரும் கேட்கும் அளவிற்கு அவரது இசை மக்களை மயக்கி உள்ளது. இதுபோல் இசைஞானி இளையராஜா போன்று உலக அரங்கில் எங்கும் பார்க்க இயலாது. தற்போது அவர் பெரும்பாலும் பத்திரிக்கை சந்திப்பில் ஈடுபடுவது குறைவு.
சமீபத்தில் ப்ளூ கிராஸ் டிஜிட்டல் பவுண்டேஷன் என்ற நிறுவனம் மோடியும் அம்பேத்கரும் என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் பேசிய இளையராஜா மோடியின் ஆட்சி சிறந்த ஆட்சி, இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் உள்கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. மோடி அவர்கள் சமூக நீதி விஷயத்தில் பல நடவடிக்கைகள் எடுத்து உள்ளார். குறிப்பாக முத்தலாக் தடை சட்டம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. இந்த காலகட்டத்தில் அம்பேத்கார் அவர்கள் இருந்தால் மோடியைப் பார்த்து பெருமிதம் கொள்வார் என்று கூறியிருந்தார்.
அம்பேத்கரை போன்று மோடியும் இந்தியாவைப் பற்றி கனவு காண்கிறார் என்று இளையராஜா கூறியிருந்தார். இது பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜா ஒரு சங்கியாக மாறிக் கொண்டிருக்கிறார்.இவர் இப்படி பேசியதற்கு காரணம் இந்தியாவின் மிக உயரிய விருதான ‘தாதா சாஹேப் பால்கே’ விருதுக்காக மோடியைப் புகழ்ந்து வருகிறார் என்று மக்களிடையே விமர்சனங்கள் வருகிறது.
இவரது தம்பி கங்கை அமரனும் பாஜகவைச் சேர்ந்தவர். இப்பொழுது இருவரும் ஒன்றாக இருப்பதனால் தம்பியின் மூலம் மோடியை புகழ்ந்து இருக்கலாம் என்ற செய்தியும் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் விருதுகளை தேடி செல்பவர் இளையராஜா அல்ல இளையராஜா தேடி பல விருதுகள் வரும். இதுதான் இளையராஜா என்று மக்கள் கூறும் பட்சத்தில் மோடியைப் புகழ்ந்து அதுவும் அம்பேத்கருடன் சேர்த்து புகழ்ந்தது அனைவரிடமும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.