Yogi Babu: நடிகர் யோகி பாபுவுக்கு கடந்த சில நாட்களாகவே நேரம் சரியில்லை போல. கெட்ட நேரம் அவரை கட்டம் கட்டி அடித்துக் கொண்டிருக்கிறது.
சாதாரண கம்பி தான் என்று நினைத்து கரண்டு கம்பியை தொட்டு விட்டான் என்று ஒரு நகைச்சுவையான வசனம் உண்டு. அப்படித்தான் யோகி பாபுவின் நிலைமையும் ஆகிவிட்டது. போற போக்குல வலைப்பேச்சு சேனலை பற்றி எதார்த்தமாக அவர் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டார்.
தற்போது காலை சுத்துன பாம்பு போல் பிஸ்மி யோகி பாபுவை துரத்திக் கொண்டிருக்கிறார். யோகி பாபு சொன்ன விமர்சனத்திற்கு முதலில் மறுப்பு தெரிவித்தது வலைப்பேச்சு சேனல். அதன் பின்னர் யோகி பாபு அஜித் பற்றிய எங்களிடம் இப்படி சொன்னார் என ஒரு விஷயத்தை சொன்னார்கள்.
தற்போது யோகி பாபுவால் பாதிக்கப்பட்டேன் என்று வலைப்பேச்சு சேனலில் ஒரு தயாரிப்பாளர் கதறிக் கொண்டிருக்கிறார். நேற்று வரை ஒரு அளவுக்கு யோகி பாபுவுக்கு சிலர் சப்போர்ட் செய்து வந்த நிலையில் இந்த தயாரிப்பாளரின் பேட்டியில் அத்தனை பேரும் யோகி பாபுவுக்கு எதிராக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
நடன இயக்குனர் தினேஷ் மற்றும் யோகி பாபு இருவரையும் வைத்து படம் எடுத்த லோக்கல் சரக்கு படத்தின் தயாரிப்பாளர் தான் இந்த பேட்டியை கொடுத்தது. இவர் தன்னுடைய பேட்டியில் அந்த படத்திற்கு யோகி பாபுவை நடிக்க வைப்பதற்குள் தான் பட்ட கஷ்டத்தை சொல்லி இருக்கிறார்.
வில்லன் முகம் காட்டும் காமெடியன்!
அதாவது படத்தில் ஒப்புக்கொண்டு அடுத்த வாரமே கால் சீட்டு தருகிறேன் என்று சொல்லி யோகி பாபு மொத்த சம்பளத்தையும் வாங்கி இருக்கிறாராம். ஆனால் தொடர்ந்து படங்களில் பிசியாக இருக்கிறேன் என கிட்டதட்ட ஒன்பது மாதங்கள் படப்பிடிப்பை தள்ளிப் போட்டு இருக்கிறார்.
தயாரிப்பாளரும் அதுவரை யோகி பாபு இல்லாத சீன்களை படமாக்கி இருக்கிறார். அதன் பின்னர் படப்பிடிப்புக்கு வரும் யோகி பாபு அவ்வப்போது தலைகாட்டி விட்டுப் போய் விடுவார் என்று சொல்கிறார் தயாரிப்பாளர். ஏழு மணிக்கு படப்பிடிப்புக்கு வர சொன்னால் மதியம் 12 மணிக்கு தான் வருவாராம்.
வந்ததும் கேரவனுக்குள் போய் உட்கார்ந்து விடுவாராம். அதன் பின்னர் அவர் வரும் வரை மொத்த பட குழுவும் காத்திருப்பார்களாம். அவர் வரும் நாட்களில் ஒரு சீன் மட்டுமே எடுப்பதற்கு தான் நேரம் ஒதுக்கி கொடுத்ததாக அந்த தயாரிப்பாளர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
லோக்கல் சரக்கு படத்தை எடுத்த ரிலீஸ் பண்ணுவதற்குள் தன்னுடைய வீடு மற்றும் நிம்மதி மொத்தமாய் கலைந்து விட்டதாக அந்த தயாரிப்பாளர் சொல்லி இருக்கிறார். மேலும் இவர் தற்போது அந்த தயாரிப்பு நிறுவனத்தையே மூடிவிட்டு வேறொரு பேனரில் புது படத்தை தயாரித்து வருகிறார்.
ரஜினி மற்றும் விஜய் போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு மட்டும் யோகி பாபு சரியாக சென்று விடுகிறார். என்னைப் போன்ற சின்ன தயாரிப்பாளர்களை இப்படி அலைய விடுவதாக அந்த தயாரிப்பாளர் ரொம்பவே மனம் நொந்து பேசி இருக்கிறார்.
யோகி பாபு மற்றும் வலைப்பேச்சு சேனலுக்கான கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் வேறு திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம். வைக்க கண்டிப்பாக யோகி பாபு பத்திரிகையாளர்களிடம் தன்னிலை விளக்கம் கொடுத்தால் தான் எல்லாம் முடிவுக்கு வரும்.
- யோகி பாபு ஒரு கடஞ்செடுத்த குப்பை
- யோகி பாபு ஹீரோவாக மாஸ் காட்டிய 6 படங்கள்.
- இந்தியன் 2வால் யோகிபாபுக்கு வந்த சங்கடம்