நடிகருக்கு நாடாளும் தகுதி இல்லையா? விஜய் தொண்டர்களால் தாக்கப்பட்ட பிரபலம்

Vijay : “தமிழக வெற்றி கழகம்” கட்சியின் தலைவர் விஜய் சினிமா பின்னணியிலிருந்து வந்தவர்தான். ஆனால் இவர் நடந்துகொள்வதையெல்லாம் பார்த்தால் ஏற்கனவே பல வருடமாக அரசியலில் இருந்தவர் போலத்தான் இவரது பக்குவம் இருக்கிறது.

“வலைப்பேச்சு பிஸ்மி” தற்போது அளித்திருந்த பேட்டி ஒன்றில் “நடிகருக்கு நாடாளும் தகுதி இல்லை” என கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பும் செய்தியாக வலம் வருகிறது. விஜய்க்கு இதற்கு முன் அரசியல் தெரியாது, அவர் ஈடுபடவும் இல்லை. திடீரென ரசிகர்களை வைத்துக்கொண்டு கட்சியை தொடங்கி விட்டார்.

நடிகருக்கு நாடாளும் தகுதி இல்லை..

இது ஒன்றும் தவறில்லை, கட்சி ஆரம்பிப்பது என்பது அவரவர் சுதந்திரம், இதையெல்லாம் வைத்துக்கொண்டு நாட்டை ஆண்டு விடலாம் என்று நினைப்பது தவறு. நடிகனுக்கு அரசியலை பற்றிய பக்குவம் கம்மி, இந்த பக்குவத்தையும், இந்த நடிகர் முகத்தையும் வைத்துக்கொண்டு நாட்டை ஆண்டுவிட முடியாது என்று கூறியுள்ளார் பிஸ்மி.

சினிமாவில் உள்ளது என்னுடைய நடிப்பு முகம், இதுதான் என்னுடைய சுயரூபம், சுயமுகம் என்று சொல்லி நீங்கள் கட்சி நடத்துங்கள் என்றும் கூறியுள்ளார். இதற்கு விஜய் தொண்டர்கள் சிலர் கொந்தளித்து பேசியிருக்கிறார்கள்.

அதாவது விஜயகாந்த் அரசியலுக்கு வரும்போது உச்ச நடிகராக! தமிழ் சினிமாவில் இருந்தவர்தான். ஆனால் இவரால் முதலைமைச்சர் ஆக முடியவில்லை. சீமான் இயக்குனராகவும், நடிகராகவும் இருந்தவர்தான் இவர் தற்போது கட்சி வைத்து நன்றாக செயல்பட்டு வருகிறார். இதுவரை இவருக்கும் முதலமைச்சர் பதவி கிடைக்கவில்லைதான்.

ஆனால் MGR அவர்களை மறந்து போய் பேசிக்கொண்டிருக்கிறீர்களே பிஸ்மி! என கேள்வி எழுப்புகிறார்கள் விஐய் தொண்டர்கள். அதுமட்டுமல்லாமல் MGR அவர்கள் நடித்து கொண்டிருக்கும் போதே அந்த பெரிய கட்சியுடன்தான் இருந்தார். பிறகுதான் தனிக்கட்சி ஆரம்பித்தார் என்பதும் சொல்லவேண்டிய ஒன்று.

நீங்கள் சொல்வது போல “நடிகருக்கு நாடாளும் தகுதி இல்லை” என்றால் MGR அவர்கள் தமிழ்நாட்டை ஆண்டவர் தானே?, MGR-க்கும் ரசிகர்கள்தான் தொண்டர்களாக ஆதரவு கொடுத்தார்கள். அதேபோல், விஜய்க்கும் ரசிகர்களாகிய நாங்கள் தொண்டர்களாக ஆதரவு கொடுப்போம் என்பது போல பேசி வருகிறார்களாம்.