Parithapangal : இங்கு மக்களிடம் அதிகமாக போய் சேருவது சினிமாவை காட்டிலும், சமூக வலைத்தளங்கள் தான், இன்று பெரும்பாலும் மக்கள் காலையில் சமூக வலைத்தளங்களில் தான் கண்விழிக்கிறார்கள். அந்த அளவிற்கு தற்போது சமூக வலைத்தளங்கள் இன்றியமையாதது ஆகிவிட்டது.
youtube, facebook, instagram இவைகள் தான் இன்று பாதி மக்களின் வாழ்க்கை என்றே சொல்லலாம். அவ்வாறு சமூக வலைத்தளங்களில் நாம் பார்க்கும் ஒவ்வொரு விஷயமும் உண்மையில் நடப்பதை தழுவிதான் காட்சியாக்குறார்க்கிறார்கள். அதே போல இப்போது ஒரு வீடியோ வெளியாகி சில நாட்களாக சர்ச்சையில் உள்ளது.
கோபி, சுதாகர் வீடியோவை பார்க்க ரெடியா இருங்க..
பொதுவாக நம் அனைவருக்குமே பரிதாபங்கள் கோபி, சுதாகரை தெரியும், இவர்கள் இரண்டு பேருமே நிறைய பேருக்கு பிடித்தவாறு யூடூப் சேனலை நடத்தி வருகிறார்கள். இவர்கள் போடும் அணைத்து பரிதாபங்கள் வீடியோவும் நிஜ வாழ்க்கையோடு ஒத்துப்போவது போல் இருக்கும்.
இதனாலேயே இவர்களுக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். இவர்கள் தற்போது “சொசைட்டி பரிதாபங்கள்” என வீடியோ ஒன்றை பதிவிட்டார்கள். இந்த வீடியோவில் இவர்கள் நிஜ வாழ்க்கையில் நடைபெறும் சில பிரச்சினைகளை எடுத்து பேசியிருந்தார்கள்.
அதாவது சாதி ரீதியான கட்சிகளின் கொள்கைகளை பற்றி சில கருத்துக்கள் நகைச்சுவையோடு சொல்லியிருந்தார்கள். இதை பார்த்த சில சாதி வெறியர்கள் இதை எதிர்த்து கொலை மிரட்டல் வரை போய்விட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோவை நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளர்கள்.
இவர்கள் இவ்வாறு இந்த வீடியோவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வழக்கத்தை விட இந்த வீடியோ அதிக நபர்களால் பார்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏன் இந்த வீடீயோவை நீக்க வேண்டும் என்றும் மக்கள் கேள்வி எழுப்புகிறார்களாம். நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிற்காது என்றும் கூறியுள்ளார்கள்.
ஆகவே மக்கள் ரெடியா இருந்துக்கங்க இந்த வீடியோவை டவுன்லோடு பண்ண. நல்ல கருத்துக்களை சொல்வதற்கு எந்த பின்னணியும் தேவையில்லை என அந்த எதிர்பாளர்களிடம் மக்கள் கூறி வருகிறார்களாம்.