Vijay : தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. ஆனால் அதில் விஜய் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே ஓய்வு எடுப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க இன்று அதிரடியாக விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய 8 முதல் 11 பேர் கொண்ட மத்திய ரிசர்வ் படை கமாண்டோர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்க உள்ளனர்.
அதாவது இரவு, பகல் என பாதுகாப்பு பணியில் இந்த வீரர்கள் ஈடுபட இருக்கின்றனர். சினிமாவில் நடிகராக இருக்கும் விஜய் இப்போது தான் ஒரு கட்சி தொடங்கி இருக்கிறார். அவருக்கு ஏன் Y பிரிவு பாதுகாப்பு என்றும் கேள்வி எழுந்துள்ளது.
விஜய்யின் Y பிரிவு பாதுகாப்பின் பின்னணி
விஜய்யின் ஒவ்வொரு அசைவையும் மத்திய அரசு கவனித்து வருகிறது. சமீபத்தில் தவெகா கட்சி பொதுக்கூட்டத்தில் மத்தியில் ஆளும் அரசையும், மாநில அரசையும் கண்டித்து சரமாரியான கேள்விகளை எழுப்பி இருந்தார்.
இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்போது தமிழகத்தில் திமுகவிற்கு அடுத்த இடத்தில் பாஜக இருந்து வருகிறது. திடீரென விஜய் முளைத்துள்ள நிலையில் அவரின் ஒவ்வொரு செய்கையையும் மத்திய அரசு கவனிக்க திட்டமிட்டுள்ளது.
அதனால் தான் விஜய்யை உளவு பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு Y பிரிவு பாதுகாப்பு அனுப்பப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். பழம் தின்று கொட்டை போட்டவர்களே அரசியலில் ஆட்டம் கண்டு விடுகின்றனர்.
ஆனால் விஜய்க்கு அரசியல் புதுசு என்றாலும் அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் வாக்காளர்களின் கவனம் பெற்று வருகிறது. இதனால் மத்திய அரசு விஜய்யின் அடுத்தடுத்த நடவடிக்கையை கண் கொத்திப் பாம்பாக கவனித்து வருகிறது.