Vijay : தற்போது எதிர்பார்ப்போடு அனைவரும் காத்துக்கொண்டிருப்பது விஜய்யின் மதுரை மாநாட்டிற்காக. இந்த மாநாட்டிற்கு மேடைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது.
விஜய்க்கு முன் MGR இதே மதுரையில் 1986-ல் தனது கட்சி மாநாட்டை நடத்தினார். அதற்கு பிறகு விஜயகாந்த் தனது முதல் கட்சி மாநாட்டை 2005-ல் மதுரையில் நடத்தினார். அதற்கு பிறகு தற்போது விஜய் தனது கட்சியின் 2-ஆவது மாநாட்டை மதுரையில் நடந்த போகிறார்.
ரசிகர்களை கவர விஜய் செய்த பிரமாண்ட திட்டம்..
அதனால் இந்த மாநாட்டிற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது. எந்த அரசியல்வாதியும் செய்யாத ஒரு புதுமையான விஷயம் “Ramp Walk” இதை விஜய் தனது முதல் மாநாட்டில் செய்தார்.
இந்த “Ramp Walk” மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. ஆனால் இன்னும் சற்றுதூரம் வந்திருக்கலாம் என ரசிகர்கள் கூறியிருந்தார்கள். அந்த குறைகளை தீர்த்து வைப்பதற்காக தற்போது மதுரை மாநாட்டில் 1KM தூரம் “Ramp Walk” வைப்பதற்காக வேலைகள் நடந்து வருகின்றவாம்.
ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காக இந்த பிரமாண்ட “Ramp Walk” மேடை உருவாக்கப்படுகிறதாம். கொடி ஏற்றிவிட்டு அப்படியே “Ramp Walk” மேடையில் விஜய் மாநாட்டு மேடையை அடைந்து விடுவாராம். இந்த கண்கொள்ளா காட்சிக்காக மதுரை மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்களாம்.
இந்த மாநாடு நடந்து முடிந்தால் மக்களுக்கு விஜய் அரசியலை பற்றி மேலும் ஒரு புரிதல் கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஒருபக்கம் மாநாடு தேதி மாறப்போகிறது என பேசிக்கொள்கிறார்கள். என்ன நடக்க போகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.