TVK மாநாடு தேதியில் மாற்றம்.. நெருக்கடி கொடுக்கும் பெரிய தலக்கட்டு

Vijay : விஜய் கட்சி ஆரம்பித்ததிலிருந்து அரசியல் களத்தில் ஒரே பிரச்சினைதான். இருக்குற கட்சிகளை வைத்தே சமாளிக்க முடியவில்லை. இதில் புதிதாக ஒரு கட்சியா என்று ஏளனமாக பார்க்கப்பட TVK, இன்று மாபெரும் கட்சியாக எழுந்து நிற்கின்றது.

பொதுவாக ஒரு தலைவன் உருவாக வேண்டுமென்றால் கூட்டம் கூட்டி காமிக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் நியதி. அந்த வகையில் என்றோ தலைவர் ஆகி விட்டார் விஜய். எல்லாரும் கட்சி ஆரம்பித்து பிறகு ஒன்றிரண்டு தேர்தலில் தோற்று நம்முடன் கூட்டணி போடுவார்கள் என நினைத்த பெரிய கட்சிகள் எல்லாம், இப்போது எங்கே இவர் அரியணை ஏறிவிடுவாரோ என்ற பயத்துடன் இருக்கின்றனர்.

நெருக்கடி கொடுக்கும் பெரிய தலக்கட்டு..

எப்படியெல்லாம் தொந்தரவு கொடுக்கலாம் எப்படியெல்லாம் கட்சியின் வளர்ச்சியயை தடுக்கலாம் என ரூம் போட்டு யோசித்து கொண்டே இருப்பார்கள் போல எதிர்ப்பாளர்கள். அதுபோல்தான் இப்போது சில சம்பவங்கள் நடைபெறுகிறது.

விஜய் தனது மதுரை மாநாடு தேதியை அறிவித்து கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இப்பொது வந்து மாநாடு தேதியை மாற்றும்படி போலீசார்கள் நெருக்கடி கொடுக்கிறார்களாம். அதாவது விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27-ம் தேதி வருவதால் அதற்க்கு பாதுகாப்பு கருதி மாநாடு தேதியை மாற்றுமாறு கடிதம் வந்துள்ளதாம் போலீசாரிடமிருந்து.

அதுமட்டுமல்லாமல் ஆகஸ்ட் 18-22 தேதிக்கும் மாநாட்டை வைக்குமாறு கூறியுள்ளார்களாம். அதனால் இந்த தேதிக்குள் மாநாட்டை வைக்க முடிவு செய்துவிட்டார்களாம் TVK.

தேதியை விஜய் அறிவிப்பார் என புஸ்ஸி ஆனந்த் மீடியாவில் அறிவித்துள்ளார். இதனால் விஜய் தொண்டர்கள் இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

வேணுமென்றே மாநாடு நெருங்கும் போது தேதியை மாற்ற சொல்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். இதெல்லாம் அந்த பெரிய கட்சியின் வேலையாகத்தான் இருக்கும் என விஜய் ரசிகர்கள் கொந்தளிக்கிறார்களாம்.