Vijay : தமிழக வெற்றி கழகம் கட்சி ஆரம்பித்து பல மாதங்கள் ஆகிவிட்டன. எந்த ஓரு அரசியல் வரலாற்றிலும் எதிர்ப்பார்க்காத அளவுக்கு மிக குறுகிய காலத்தில் அதிக வரவேற்பை பெற்றுள்ளார் விஜய்.
விஜய் எதிர்ப்பாளர்கள் அனைவர்க்கும் இது முற்றிலும் எதிர்பார்க்காத ஒன்று. அனைவருக்கும் என்னதான் வெளியில் காட்டவில்லை என்றாலும் உள்ளுக்குள் பயம் இருக்கத்தான் செய்கிறது போல. விஜய் அவர்களின் செயல்பாடும் அந்த அளவுக்கு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே விஜய் அவர்கள் முதல் மாநாட்டை விக்ரவாண்டியில் வெற்றிகரமாக நடத்தி முடித்தார். அதிலிருந்துதான் அனைவர்க்கும் விஜய் மேல் ஒரு பயம் வர ஆரம்பித்து விட்டது.
தற்போது விஜய் அவர்கள் இரண்டாவது மாநாட்டை மதுரையில் வைக்க போவதனாக அறிவிப்பு கொடுத்திருந்த நிலையில் அதுவே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் இவர் விஜயகாந்த் பிறந்தநாளன்று மாநாட்டை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதில் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் விஜய் அவர்களின் திருமண நாளும் அன்றுதானம். அதுமட்டுமல்லாமல் விஜயகாந்த் அவர்கள் ஆட்சி ஆரம்பித்து அவரது முதல் மாநாட்டை மதுரையில் தன நடத்தினர். இதல்லாம் நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம்தான்.
இத்தனை லட்சம் பேருக்கு அனுமதி கிடைக்குமா, பேராசைப்படுகிறாரா விஜய்..
ஆனால் தற்போது விஜய் அவர்கள் கொடுத்துள்ள அறிக்கை நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. ஏனென்றால் விஜய் அவர்கள் மதுரை மாநாட்டை 20 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்த்து தயார்படுத்தி வருகிராம். என்னதான் சந்தோசம் ஒருபக்கம் இருந்தாலும் அகலக்கால் வைக்கிறார் விஜய் என்ற ஐயமும் எழுகிறது.
இவ்வாறு இருக்க இதனை பெருகும் அனுமதி தருவார்களா என்ற கேள்வியும் எழுகிறது. இதோடு நடிகர் விஜய் அவர்கள் தந்திரமாக தான் பலத்தை, மக்களின் ஆதரவு எந்த அளவுக்கு இருக்குறது என்பதை தெரிந்துகொள்ள இதையெல்லாம் செய்கிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது.
ஏற்கனவே பயந்து போயிருக்கும் அரசியல்வாதிக்கு மேலும் பயத்தை அதுவரை விஜய் அல்லது தன்னுடைய எதிர்பாரப்பு தவறானால் என்ன செய்ய போகிறார் என்ற கேள்வியும் எழுகிறது. மதுரை மாநாடு நடைபெற்று முடிந்ததால் தான் இதற்கான விடை தெரியவரும்.