Coolie: லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ் தமிழ் சினிமாவையே புரட்டிப்போட்டு இருக்கிறது. அந்த LCU இப்போது RCU-விடம் சரண்டர் ஆகி இருப்பதுதான் சமீபத்திய அப்டேட்.
ரஜினி சினிமேட்டிக் யுனிவர் தான் அந்த RCU. லியோ ரிலீஸ்க்கு பிறகு சினிமா மீது இருந்த லோகேஷின் தன்னம்பிக்கை குறைந்துவிட்டதோ என்ற சந்தேகம் கடந்த சில தினங்களாக அவருடைய ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது.
சரண்டர் ஆன லோகேஷ்
இதற்கு காரணம் லியோ படம் வரைக்கும் லோகேஷ் படத்தின் ஸ்டைல் ஒரே மாதிரி இருக்கும். கூலி படத்தில் அது அப்படியே மாறி இருக்கிறது.
இதுவரை லோகேஷ் கனகராஜ் படத்தில் ஐட்டம் சாங் என்று ஒன்று இருந்ததே கிடையாது. ஆனால் ஜெயிலர் படத்தில் தமிழ்நாடு அது போல் கூலி படத்தில் பூஜா ஹெக்டே ஐட்டம் சாங் பண்ண இருக்கிறார்.
இது தயாரிப்பு தரப்பில் இருந்து லோகேஷுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் என்று சொல்லப்படுகிறது . லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் இனி கூலி படத்தை வெற்றி படமாக மாற்றினால் தான் மீண்டும் லோகேஷ் தான் நினைத்த LCU படங்களை எடுக்க முடியும்.
இப்போதைக்கு ரஜினி நடித்த கூலி படம் முழுக்க முழுக்க RCU தான்.