ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

புது ஜோடியுடன் ஐபிஎல் பார்க்க வந்த லோகேஷ்.. நெட்டிசன்களிடம் வசமாக சிக்கிய புகைப்படம், பொண்டாட்டி பாவம்

Lokesh Kanagaraj : லோகேஷின் லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் அடுத்ததாக ரஜினியின் படத்தை லோகேஷ் எடுக்க இருக்கிறார். இதுதவிர தெலுங்கில் பிரபாஸின் படத்தையும் இயக்க இருக்கிறார்.

இது நம்ம லோகேஷா? என சமீபத்தில் ஆச்சரியப்பட செய்திருந்தார். இனிமேல் என்ற ஆல்பம் பாடல் கமலஹாசனின் பாடல் வரிகளில் உருவாகி இருக்கிறது. இதில் ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் நடித்துள்ளனர்.

இந்தப் பாடலின் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி இணையத்தில் ட்ரோல் கன்டென்ட் ஆக மாறியது. ஏனென்றால் லோகேஷின் படங்களை எடுத்துக் கொண்டாலே அதிகம் ஆக்சன் காட்சிகள் தான் இருக்கும்.

கைதி படத்தில் ஹீரோயின், பாடல் காட்சிகள் போன்று எதுவுமே இடம்பெறவில்லை. மேலும் லியோ படத்தில் த்ரிஷா நடித்ததால் கொஞ்சம் ரொமான்ஸ் காட்சி வைத்திருந்தார்.

பொதுவாகவே பேட்டிகளில் பேசும்போது லோகேஷ் தனக்கு ரொமான்ஸ் வராது என்று கூறியிருந்தார். ஆனால் இனிமேல் பாடலில் ஸ்ருதிஹாசன் உடன் ஒவர் நெருக்கம் காட்டி இருந்தார்.

இனிமேல் ப்ரோமோவில் பலான காட்சிகள் இடம் பெற்ற நிலையில் முழு பாடல் எப்படி இருக்கும் என ரசிகர்களை யோசிக்க வைத்தது. இந்த சூழலில் நேற்று சென்னை ஸ்டேடியத்தில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டி தொடங்கியது.

ஐபிஎல் மேட்ச் பார்க்க வந்த ஸ்ருதிஹாசன், லோகேஷ்

பொதுவாகவே ஐபிஎல் போட்டியை பார்க்க சினிமா பிரபலங்கள் அதிகம் ஆர்வம் காட்டுவது வழக்கம் தான். ரஜினி முதல் விஜய், சிவகார்த்திகேயன் என பலர் பார்க்க வருவார்கள். அவ்வாறு நேற்றைய தினம் ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் இருவரும் ஐபிஎல் நடக்கும் ஸ்டேடியத்திற்கு வந்துள்ளனர்.

ஐபிஎல் மேட்ச் பார்க்க வந்த ஸ்ருதி, லோகேஷ்

lokesh-shruthi
lokesh-shruthi

அப்போது ரசிகர் ஒருவர் லோகி, ஸ்ருதி இருவரும் ஒன்றாக நிற்கும் புகைப்படத்தை எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். லோகேஷ் இப்படி மாறிட்டாரே, அவரோட பொண்டாட்டி ரொம்ப பாவம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஸ்ருதிஹாசன் உடன் மேட்ச் பார்க்க வந்தது குத்தமாடா என்பது தான் லோகேஷின் மைண்ட் வாய்ஸாக இருக்கும்.

ஐபிஎல் மேட்ச் பார்க்க வந்த நட்சத்திரங்கள்

shruthi-lokesh-sathish
shruthi-lokesh-sathish

Trending News