விக்ரமை விட தளபதி 67-க்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு.. பார்த்து பார்த்து செலக்ட் பண்ணும் லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தளபதி 67 திரைப்படம் விரைவில் உருவாக இருக்கிறது. இதற்கான வேலைகளில் தற்போது லோகேஷ் படு பிஸியாக இருக்கிறார். விக்ரம் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு அவர் இந்த படத்தை இயக்க இருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் இந்த வெற்றியால் தற்போது லோகேஷுக்கு முன்பை விட கூடுதல் பொறுப்பும் கூடியிருக்கிறது. அதனால் தளபதி 67 திரைப்படத்தை வேற லெவல் வெற்றி திரைப்படமாக மாற்ற வேண்டும் என்று அவர் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார்.

அந்த விதத்தில் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை கூட அவர் கவனமாக தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில் இந்த படத்தில் சமந்தா ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபு இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து மெர்சல், சர்க்கார் பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் விஜய், யோகி பாபு காம்போவும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் தற்போது தமிழ் சினிமாவில் யோகி பாபு இல்லாத திரைப்படங்களே வெளிவருவது கிடையாது. அந்த அளவுக்கு இவர் ஒரு ராசியான நடிகராக பார்க்கப்படுகிறார். இதனால் தான் லோகேஷ் இவரை இந்த படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்.

அந்த வகையில் யோகி பாபு முதல் முறையாக லோகேஷ் உடன் கூட்டணி அமைத்துள்ளார். இது பற்றி ஒரு மேடையில் அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். மேலும் அஜித், ரஜினி போன்ற டாப் ஹீரோக்களின் திரைப்படங்களில் யோகி பாபுவை நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இவர் மீண்டும் விஜய்யுடன் இணைய இருப்பது அவருடைய ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.