புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எச்.வினோத் கதையில் உள்ள நச் லைன்.. உடனே கெட்டியாக பிடித்து கொண்ட கமல்

Kamal-Lokesh: லோகேஷ் கமலின் தீவிர ரசிகன் என்று சொல்வதை விட பக்தன் என்று சொன்னால் தான் சரியாக இருக்கும். அந்த அளவுக்கு ஆண்டவர் மீது அவருக்கு வெறித்தனமான அன்பு இருக்கிறது. அதை பல பேட்டிகளில் அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதேபோன்று அவர் பேசும் பத்து வார்த்தைகளில் ஒன்று கமல் பற்றியதாக கட்டாயம் இருக்கும்.

அதனாலேயே விக்ரம் என்ற மாபெரும் ஹிட் படத்தை கமலுக்கு தரமான ஒரு ரீ என்ட்ரி சம்பவமாக அவர் கொடுத்திருந்தார். அதற்கு முத்தாய்ப்பாக இருந்த இடைவேளை காட்சி தான் இதற்கான சிறந்த உதாரணம். இப்படி தன்னுடைய குருவை பெருமைப்படுத்தி விட்டோம் என்ற கர்வத்தில் இருக்கும் லோகேஷ் எச் வினோத்துக்கு தன் சார்பாக ஒரு வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

கமல் வினோத் கூட்டணி

தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருக்கும் ஆண்டவர் வினோத்துடன் KH 233 படத்தில் இணைய இருக்கிறார். இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் லோகேஷ் வினோத் உடன் இணைந்திருக்கும் போட்டோவை பதிவிட்டு இந்த கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்தது மட்டுமல்லாமல் கமலை என்னுடைய ஆண்டவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் அவர் நான் தான் ஆண்டவரின் தீவிர ரசிகன் என்றும், விக்ரம் அளவுக்கு உங்களால் ஈடு கொடுக்க முடியுமா என்றும் கேட்பது போல் இருக்கிறது. அஜித்துக்கு துணிவு என்ற பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்த வினோத் கமலுக்காக பல மாதங்களாக பார்த்து பார்த்து ஒரு தரமான ஸ்கிரிப்ட்டை தயார் செய்திருக்கிறார். இந்த படம் துணிவு படம் போன்ற ஸ்டைலில் இருக்கும் என்று கூறுகின்றனர். கமல் துணிவை பார்த்துதான் அசந்துவிட்டாராம்.

துணிவு படத்தை பார்த்து கமல் நான் நினைக்கும் ஹாலிவுட் படம் போல் இருந்தது என்று கூறினாராம். நிச்சயம் அது ஒரு சமுதாய பிரச்சனையை மையப்படுத்தி இருக்கும் என்ற செய்தியும் ஒரு பக்கம் அரசல் புரசலாக பரவிக் கொண்டிருக்கிறது. இதனாலேயே இந்த கூட்டணியை ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்புடன் கவனித்து வருகின்றனர். அதேபோன்று கமலின் பிறந்த நாளை முன்னிட்டு இது பற்றிய முக்கிய அப்டேட் ஒன்றும் வெளிவர இருக்கிறது.

இந்த சூழலில் லோகேஷ் வாழ்த்துவது போல் சவால் விட்டு இருப்பதும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. ஆக மொத்தம் இது சிறந்த ஃபேன் பாய் சம்பவமாக இருக்கும் என்பதும் உறுதியாகிறது. வரும் 3ம் தேதி இந்தியன் 2 அப்டேட் வர இருக்கும் சூழலில் ஆண்டவரின் பிறந்தநாள் கொண்டாட்டமும் இப்போதிருந்தே களைகட்ட தொடங்கியுள்ளது.

vinoth-lokesh
vinoth-lokesh

Trending News