செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

மொத்த அழகையும் கெடுத்துக் கொண்ட லோகேஷ் கனகராஜ்.. சுதா கொங்கார எண்ணத்தில் விழுந்த மண்

சுதா கொங்காரா இப்பொழுது சூர்யாவிற்கு அல்வா கொடுத்துட்டு புறநானூறு படத்தை சிவகார்த்திகேயனை வைத்து எடுக்கப் போகிறார். இந்த படத்திற்கு வில்லன் கதாபாத்திரத்திற்காக யாரை போடலாம் என ஆர்டிஸ்ட் தேர்வில் இருக்கிறார் சுதா.

புறநானூறு படத்தில் மற்றொரு நடிகராக லோகேஷ் கனகராஜ் நடிக்கிறார். ஏற்கனவே அவர் தன்னை ஒரு நடிகராக ஸ்ருதிஹாசன் உடன் வெளிவந்த ஆல்பத்தில் நிரூபித்து விட்டார்.இதில் வந்த கவனிப்பு தான் அவரை ஒரு நடிகராக சுதா கொங்காராவிடம் கொண்டு சென்றுள்ளது.

லோகேஷ் கனகராஜ் பார்ப்பதற்கு ஒரு கரடு முரடான ரக்குடு பாய் லுக்கில் தான் எப்பொழுதுமே இருப்பார். கைகளில் ஒரு காப்பு அணிந்து,சுருட்டை தலையோடு செம அழகாக வளம் வருவார். இப்பொழுது முற்றிலுமாக முடியை வெட்டி பார்ப்பதற்கு சாப்ட்வேர் இன்ஜினியர் போல் காட்சியளிக்கிறார்.

சுதா கொங்கார எண்ணத்தில் விழுந்த மண்

பத்திரிகையாளர் சந்திப்பில் லோகேஷின் இந்த அடையாளமாற்றத்திற்கு கேள்வி கேட்டபோது கூட சமாளித்து விட்டு சென்று விட்டார். ஒருவேளை படத்தில் நடிப்பதற்காக கெட்டப்பை மாற்றிவிட்டார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

உண்மையில் இந்த படத்திற்காக சுதா கொங்காரா அவர் தோற்றத்தை பார்த்து வில்லனாக நடிக்க வைக்க தான் திட்டமிட்டு இருக்கிறார். நீங்கள் பார்ப்பதற்கு வில்லன் போல் இருக்கிறீர்கள் என அவரிடம் கூறியிருக்கிறார். இது லோகேஷ்க்கு மன உறுத்தலாகவே இருந்திருக்கிறது.

திடீரென இப்பொழுது லுக்கை மாற்றி விட்டு. இந்த படத்தில் வில்லனாக நடிக்க விருப்பமில்லை என சுதாவிடம் கூறிவிட்டாராம். ஆனால் படத்தில் நடிக்கிறார். இவருக்கு இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரமாம். வில்லின் அவதாரம் மட்டும் எடுக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறி வருகிறார்.

Trending News