வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கமல் கொடுத்த தைரியத்தால் வந்த தலைக்கணம்.. சூப்பர் ஸ்டாரை இயக்க கண்டிஷன் போட்ட லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் இப்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக உருவெடுத்துள்ளார். உச்ச நட்சத்திரங்கள் பலரும் இவருடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று காத்து கிடக்கின்றனர். அந்த வகையில் தற்போது அவர் விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து இவர் அடுத்ததாக யாரை வைத்து படம் எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் கைதி, விக்ரம் போன்ற படங்களின் அடுத்த பாகங்களும் வெளிவர இருக்கிறது. இப்படி பிஸியாக இருக்கும் வேலையில் லோகேஷ் ரஜினியை இயக்குவதற்கு தயாராகி இருக்கிறார்.

Also read: லியோவை ஓரம் கட்ட வரும் ஏகே 62.. அஜித் கொடுக்க போகும் பிறந்தநாள் சர்ப்ரைஸ்

விக்ரம் திரைப்படம் வெளிவந்த சமயத்திலேயே சூப்பர் ஸ்டாருக்கு அவருடன் இணைய வேண்டும் என்ற ஆசை இருந்தது. இது குறித்து ஏராளமான செய்திகள் கூட வெளிவந்தது. அந்த வகையில் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் இயக்கும் தலைவர் 171 திரைப்படத்தில் ரஜினி நடிக்க சம்மதித்திருக்கிறார்.

ஆனால் அந்த பேச்சு வார்த்தையில் பல பிரச்சனைகள் தலைதூக்கி இருக்கிறது. என்னவென்றால் லோகேஷ் இப்படத்தை இயக்குவதற்காக 40 கோடி சம்பளம் வேண்டும் என்று அடம் பிடித்தாராம். அது மட்டுமல்லாமல் தெலுங்கு தயாரிப்பாளர்கள் பலரும் எனக்காக காத்து கிடக்கிறார்கள். இதைவிட அதிக சம்பளம் தரவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்றும் கூறி சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு செக் வைத்து இருக்கிறார்.

Also read: கொழுந்து விட்டு எரியும் மல்யுத்த போராட்டம்.. நியாய தர்மத்தை ஓரம் கட்டி கூலாக திரியும் குஷ்பூ

இதனால் வேறு இயக்குனரை தேடும் முடிவில் தயாரிப்பு தரப்பு இருந்திருக்கிறது. ஆனால் ரஜினி லோகேஷ் உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். அப்படி இருக்கும் பட்சத்தில் ராஜ்கமல் நிறுவனம் கூட இப்படத்தை தயாரிக்க ரெடியாகவே இருந்திருக்கிறது. அதன் பிறகு தான் சன் பிக்சர்ஸ் 40 கோடி சம்பளம் கொடுப்பதற்கு முன் வந்திருக்கிறது.

கமல் கூட்டணியில் வெளியான விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றி தான் லோகேஷை இந்த அளவுக்கு சம்பளத்தை உயர்த்த வைத்திருக்கிறது. அந்த தைரியத்தில் தான் அவர் கொஞ்சம் தலைக்கணமாகவும் பேசி வருவதாக திரையுலகில் வெளிப்படையாகவே கிசுகிசுக்கின்றனர். அந்த வகையில் லோகேஷ், ரஜினியை இயக்குவதற்கு இப்படி ஒரு கண்டிஷன் போட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: இந்த வருடம் இந்திய சினிமாவை புரட்டிப் போட உள்ள 6 தமிழ் படங்கள்.. பாலிவுட்டுக்கு பயத்தை காட்டும் லியோ

Trending News