வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

டாப் ஹீரோயின் மார்க்கெட்டை உடைக்க தங்கையை களம் இறக்கும் லோகேஷ்.. அவந்திகா கனகராஜ் வைரல் புகைப்படம்

Lokesh’s Sister: லோகேஷ் குறுகிய காலத்துக்குள் ஐந்து படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் வாண்டட் இயக்குனர்களின் லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறார். அதற்கு காரணம் இவர் எடுத்த படங்கள் அனைத்தும் மக்களிடம் பெற்ற வரவேற்பு தான்.

அப்படிப்பட்ட இவரை இயக்குனராக பலருக்கு தெரிந்திருந்தாலும், இவருடைய தனிப்பட்ட சில விஷயங்கள் வெளிவந்ததில்லை. உதாரணத்திற்கு இவருடைய குடும்பம் பற்றிய விஷயங்கள், என்ன ஏது என்று யாருக்குமே தெரியாது.

பிரபலமாகி விட்டாலே அவர்களுடைய விஷயங்கள் ஒவ்வொன்றும் சினிமா மூலம் வெளி வந்து கொண்டே இருக்கும். இதுல லோகேஷ் மட்டும் தப்பித்து விட முடியுமா என்ன? நேற்று லோகேஷ் அவருடைய 37 வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.

லோகேஷின் தங்கையா இது?

அந்த வகையில் பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து லோகேஷின் சகோதரியும் அண்ணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அவருடன் இருந்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் ரொம்பவே ஷாக் ஆகி என்னது லோகேஷுக்கு இப்படி ஒரு தங்கையா என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். ஆமாம் லோகேஷுக்கு அவந்திகா லோகேஷ் என்ற ஒரு தங்கை இருக்கிறார். இவர் “The Route” தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

lokesh sister avanthika
lokesh sister avanthika
lokesh sister
lokesh sister
lokesh sister (1)
lokesh sister (1)

இந்த நிறுவனத்தை ஜெகதீஷ் பெரியசாமி நடத்தி வருகிறார். இவர் தான் லியோ படத்தின் இணை தயாரிப்பாளர் கூட. இந்த நிறுவனம் திரைப்படங்களுக்கு மட்டுமே சொந்தமானது. பொதுவாக பிரபலங்கள் செல்லும் நிகழ்ச்சிகள், பட விழாக்கள் போன்றவற்றை இந்த நிறுவனத்தினர் தான் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் இதில் முக்கிய பொறுப்பில் லோகேஷின் தங்கை அவந்திகாவும் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இவருடைய புகைப்படத்தை பார்க்கும் பொழுது ரொம்பவே அழகாகவும், ஹீரோயினை விட ஜொலிக்கிறார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் இப்ப இருக்கிற ஹீரோயின்களில் மார்க்கெட்டை உடைக்கும் அளவிற்கு தங்கையே ஹீரோயினாக லோகேஷ் களம் இறக்கப் போகிறார். இதனால் கூடிய விரைவில் லோகேஷின் தங்கையை வெள்ளி திரையில் பார்க்கலாம்.

Trending News