திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லியோ சென்சாரில் தப்பித்தாலும் அவன்ட உங்க பருப்பு வேகாது.. தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட லோகேஷ்

Leo Movie: லியோ படத்தின் ஹைப் தான் இப்போது அதிகமாக இருக்கிறது. பொதுவாக ஒரு படத்தை எடுத்த பின்பு தணிக்கை சான்றிதழுக்காக சென்சார் போர்டுக்கு அனுப்பி வைக்கப்படும். படத்தைப் பார்த்துவிட்டு அதன் தரம் குறித்து கலந்து ஆலோசித்து சான்றிதழ் தரப்படும். ஏற்கனவே லியோ படத்தில் நிறைய வன்முறை காட்சி இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியானது.

அதோடு மட்டுமல்லாமல் லியோ படத்தில் நடித்துள்ள அர்ஜுனின் அறிமுக வீடியோ வெளியான நிலையில் அதிலே இரத்தம் சொட்ட சொட்ட காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆகையால் தற்போது வெளியாகும் பெரும்பான்மையான படங்கள் கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாகத்தான் இருக்கிறது.

Also Read : ஜெயிலர் வசூலை லியோ முறியடிக்க கூடாது.. தந்திரமாய் காய் நகர்த்தும் ரெட் ஜெயண்ட் உதயநிதி

லியோ படத்தை வைத்து வெளிநாட்டில் ஒரு விபரீத விளையாட்டை விளையாட போகிறார்களாம். அதாவது லோகேஷ் மீது நம்பிக்கை வைத்து அன்சென்சார்டு படமாக வெளியிடப் போகிறார்கள். யூகேவில் இப்படி தான் லியோ படம் வெளியாகப் போகிறதாம். ஏனென்றால் லோகேஷின் படத்தில் எந்த காட்சிகளையும் கத்திரிக்க கூடாது என்பது அவர்களின் எண்ணமாக இருக்கிறது.

லியோ படத்தை முழுவதுமாக பார்த்து ரசிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் இதுபோன்ற சென்சருக்கு அனுப்பாமல் முழு படமாக வெளியாகும் சில படங்களுக்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதாவது கட் செய்யாமல் வெளியாகும் படங்கள் டெலிகிராம் போன்ற செயலியில் பதிவிறக்கம் செய்வது மிகவும் சுலபம்.

Also Read : லியோ, தலைவர் 171-க்கு நடுவில் சம்பவம் செய்ய போகும் லோகேஷ்.. கூட்டணி போடும் அனிருத்

சும்மாவே தமிழ் ராக்கர்ஸ் படம் வெளியானதற்கு முதல் நாளே இணையத்தில் படத்தை வெளியிடுகிறார்கள். இந்த சூழலில் லோகேஷ்க்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு பெரிய பிரச்சனையை ஏற்படுத்த இருக்கிறார்கள். மேலும் தமிழ் மொழியில் வெளியாகும் போது நிறைய சென்சார் காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ளது.

நான் ரெடி என்ற பாடலில் இடம் பெற்ற சில வரிகளையும் மாற்ற சொல்லி அறிவித்திருக்கிறது. லியோ படம் வெளியாவதற்கு முன்பே பல அக்கபோர்களை சந்தித்து வருகிறது. இதையெல்லாம் எப்படி சரி செய்து சொன்னபடி அக்டோபர் 19ஆம் தேதி லியோ படத்தை லோகேஷ் வெளியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Also Read : ஜவான், லியோவால் பீதியில் 30 பட தயாரிப்பாளர்கள்.. மார்க் ஆண்டனி முதல் சந்திரமுகி 2 வரை தலை தப்புமா.?

Trending News