வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அடி மடியிலேயே கை வைத்த வில்லன்.. தளபதி 67-ல் லோகேஷுக்கு பிடித்த பெரும் தலைவலி

லோகேஷ் அடுத்ததாக விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார். தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் விரைவில் தளபதி 67 பட சூட்டிங்கில் பங்கேற்க இருக்கிறார். இன்னும் சில நாட்களில் இந்த பட அறிவிப்பின் டீசர் வெளியாக இருக்கிறது.

அதற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கும் லோகேஷுக்கு படத்தின் வில்லனால் பெரும் தலைவலி உண்டாகி இருக்கிறது. இந்த படத்தில் மூன்று, நான்கு பேர் வில்லனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். அதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் ஒருவர் ஒவ்வொரு வில்லன் கதாபாத்திரங்களையும் பார்த்து பார்த்து செதுக்கி வரும் லோகேஷ், சஞ்சய் தத்தின் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

Also read: விக்ரம் படத்தை மிஞ்சும் பிரமோஷன்.. விரைவில் வெளிவர உள்ள தளபதி 67 டீசர்

ஏனென்றால் விஜய் உடன் மோத போகும் மெயின் வில்லனே அவர்தான். ஏற்கனவே இவர் கே ஜி எஃப் திரைப்படத்தில் வில்லனாக நடித்து மிரள விட்டார். அதை தொடர்ந்து விஜய்யுடன் இவர் இணைந்து இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் நடிப்பதற்கு அவர் போடும் கண்டிஷன்கள் தான் கேட்பவரை தலை சுற்ற வைத்துள்ளது.

அதாவது இவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்போது 25 பேர் கொண்ட படையோடு தான் வருவாராம். ஏனென்றால் அத்தனை பேரும் இவருக்கு அசிஸ்டெண்டாக வேலை பார்ப்பவர்களாம். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வேலை கொடுத்து வைத்திருக்கும் சஞ்சய் தத் எங்கு ஷூட்டிங் போனாலும் இந்த கும்பலோடு தான் சென்று கொண்டிருக்கிறார்.

Also read: காரும் கிடையாது, வீடும் கிடையாது.. 50 படங்களில் முக்கியமான ரோலில் நடித்த விஜய் பிரண்டுக்கு இப்படி ஒரு நிலைமையா?

அப்படி பார்த்தால் ஷூட்டிங் ஸ்பாட் சஞ்சய் தத்தின் அசிஸ்டன்களாலேயே நிறைந்து விடும். பிறகு நடிகர்கள், டெக்னீசியன்கள் எல்லாம் எப்படி வேலை பார்ப்பது என்ற கவலை தான் லோகேஷுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இதையெல்லாம் தாண்டி அவர் போட்ட மற்றொரு கண்டிஷன் தான் பயங்கரத்திலும் பயங்கரமாக இருக்கிறது.

அதாவது அவர் இரவு நேரத்தில் ஷூட்டிங் வரமாட்டாராம். எந்த காட்சியாக இருந்தாலும் பகலில் எடுத்துக் கொள்ளுங்கள் இரவில் நடிக்க மாட்டேன் என்று கரராக கூறிவிட்டாராம். பொதுவாகவே லோகேஷ் திரைப்படங்கள் இரவு நேரத்தில் தான் அதிகமாக படமாக்கப்படும். அப்படி இருக்கும்போது அடிமடியிலேயே கை வைத்திருக்கும் இந்த வில்லனை வைத்துக் கொண்டு லோகேஷ் என்ன பாடுபட போகிறாரோ தெரியவில்லை. இதை எப்படி சமாளிப்பது என்று தான் அவர் தற்போது முழித்து வருகிறாராம்.

Also read: துப்பாக்கிகளுக்கு நடுவில் மாட்டிக் கொண்ட விஜய்.. தளபதி 67 போஸ்டரால் அதிர்ச்சியில் உறைந்த லோகேஷ்

Trending News