புதன்கிழமை, ஜனவரி 15, 2025

லியோ தாஸுக்கும், விக்ரம் அமீருக்கும் உள்ள ஒற்றுமை.. லோகேஷ் சொன்ன சுவாரஸ்யம்

Lokesh: லியோ படம் வெளியாவதற்கு முன்பு எல்சியுவில் இடம்பெறுகிறதா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் இருந்தது. மேலும் சின்னதாக ஒரு துரும்பு கிடைத்தாலே அதை வைத்து ரசிகர்கள் மொத்த கதையையும் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் லியோவில் சில ட்விஸ்ட்டுகளை ரசிகர்கள் கண்டுபிடிக்க தவறி விட்டார்கள். இதைப் பற்றி லோகேஷ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

அதன் பிறகு இதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று ரசிகர்களே ஆச்சரியப்படும் விதமாக அமைந்திருக்கிறது. அந்த வகையில் விக்ரம் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் லியோவில் தொடர்புடையதாக இருக்கிறது. அதாவது லியோவில் ஏஜென்ட் அமீர் அனாதை ஆசிரமத்தில் இருந்து வந்ததாக கூறியிருப்பார்.

அதேபோல் லியோவிலும் ஆரம்பத்திலேயே விஜய் அனாதை ஆசிரமத்தில் இருந்து வந்ததாக கூறியிருப்பார். ஆகையால் இவர்கள் இருவருக்குமே ஒரு தொடர்பு இருக்கிறது என்பதை லோகேஷ் கூறியிருக்கிறார். ஆகையால் லியோ 2வில் இந்த ட்விஸ்ட் வெளிப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் விக்ரம் படத்தில் இடம்பெற்ற மாயா லியோ படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்திருப்பார். ஏஜென்ட் ஆக இருக்கும் அவர் லியோவை கண்காணிப்பதற்காக தான் அங்கு வந்துள்ளதாக லோகேஷ் கூறியிருக்கிறார். மேலும் லியோ படத்தின் முதல் காட்சியிலேயே பார்த்திபன் லியோ தாஸ் என்பதை வெளிப்படுத்தும் விதமாக காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது.

இதை கவனிக்க ரசிகர்கள் தவறிவிட்டார்கள். அதாவது சில காட்சிகளில் பார்த்திபன் என்று விஜய்யை அழைக்கும் போது அவர் கண்டுகொள்ள மாட்டார். அப்போதே அவர் லியோ தாஸாக இருக்கிறார் என்பதற்கான அறிகுறி தென்படும். இவ்வாறு படத்தில் பல சின்ன சின்ன காட்சிகளில் எல்சியுடன் லோகேஷ் கனெக்ட் செய்து இருந்தார்.

இப்போது லோகேஷ் அந்த விஷயங்கள் சொன்ன பிறகுதான் ரசிகர்களின் நினைவுக்கு வருகிறது. ஆகையால் பல நுணுக்கமான விஷயங்களை லியோ படத்தில் செய்துள்ளதை ரசிகர்கள் கவனிக்க தவறி விட்டனர். மேலும் இதன் பிறகு வரும் எல்சியுவில் லோகேஷ் கண்டிப்பாக தரமான சம்பவத்தை செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.

Trending News