சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

கூலிக்கு பின் லோகேஷ் போட்ட ஸ்கெட்ச்.. நாலா பக்கமும் லோக்கிக்கு சாத்தப்பட்ட சட்டர்

லோகேஷ் கனகராஜ் கடந்த இரண்டு ஆண்டுகளாக மோஸ்ட் வான்டட் இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். விக்ரம், மாஸ்டர், லியோ படங்களுக்குப் பிறகு பாலிவுட் நடிகர்களும் இவருக்கு தூண்டில் போட்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தடுத்து ஹிந்தி பக்கமும் படங்கள் இயக்கவியிருக்கிறார்.

தற்போது ரஜினியின் கூலி பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தை முடித்துவிட்டு 2025 ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி மற்றொரு படம் ஆரம்பிக்க திட்டம் போட்டு வைத்திருந்தார். ஆனால் எல்லா பக்கமும் இப்பொழுது அவருக்கு கேட் போடப்பட்டுள்ளது.

கூலி படத்தில் நடித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த் திடீர் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ செய்யப்பட்டார். அவரை மருத்துவர்கள் ஒரு மாதம் முதல் இரண்டு மாதம் வரை ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தி வருகிறார்கள். எப்படி பார்த்தாலும் இது குறைந்தது மூன்று மாதங்கள் எடுத்து விடும்.

நாலா பக்கமும் லோக்கிக்கு சாத்தப்பட்ட சட்டர்

அடுத்த வருடம் ஏப்ரல் 10ஆம் தேதி ஏற்கனவே வெளிவந்து சக்கை போடு போட்ட கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு லோகேஷ் திட்டமிட்டு இருந்தார். இந்த படத்தில் கார்த்தி உடன் சூர்யாவும் நடிப்பதாக இருந்தது. இதற்காக எல்லாருடைய கால் சீட்டும் வாங்கிக் கொண்டு காத்திருந்தார்.

ஏற்கனவே கைதி முதல் பாகத்தை 45 நாட்களில் அனைத்து வேலைகளையும் முடித்து சாதித்தார் லோகேஷ். இப்பொழுது இந்த படத்திற்கும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரை தான் நேரம் ஒதுக்கியிருந்தார். ஆனால் இப்பொழுது ரஜினிகாந்தின் உடல்நிலை எல்லாத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. கூலி படம் காலதாமதம் ஆனதால் லோக்கிக்கு தற்போது தலைவலி ஏற்பட்டுள்ளது.

Trending News