வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஜெயிலரை ஓரங்கட்ட தயாராகும் லியோ.. நிற்க நேரமில்லாமல் பிசியான லோகேஷ்

Leo And Jailer: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படு வேகமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. பூஜை போட்டு ஷூட்டிங் ஆரம்பித்த நாளிலிருந்தே பயங்கர எதிர்பார்ப்பை கூட்டி வரும் இப்படத்தின் பரபரப்பான அப்டேட் ஒன்று சோசியல் மீடியாவையே கலக்கிக் கொண்டிருக்கிறது.

என்னவென்றால் இடைவேளை இல்லாமல் படப்பிடிப்பை நடத்தி வந்த லோகேஷ் இன்றோடு அதற்கு பூசணிக்காய் உடைக்க போகிறாராம். அதாவது இன்றைய தினத்தோடு ஷூட்டிங்கை முடித்துவிட்டு இறுதி கட்ட வேலைகளுக்கு அவர் தயாராகி வருகிறார். அதன்படி பேட்ச் ஒர்க் ஷூட் மட்டும் சில நாட்களுக்கு காஷ்மீரில் நடக்க இருக்கிறது.

Also read: ஒரு வருஷம் சம்பவம் செய்யப் போகும் விஜய்.. லியோவை மிஞ்சிய தளபதி 68 ரிலீஸ் அப்டேட்

அதன் பிறகு VFX செயல் முறையை பார்வையிடுவதற்காக லோகேஷ் வெளிநாட்டுக்கும் பறக்க இருக்கிறார். இதற்காக தயாரிப்பாளர் 15 கோடி வரை செலவு செய்திருக்கிறாராம். அந்த அளவுக்கு VFX பகுதிகளை தரமாக தருவதற்கு லோகேஷ் மிகுந்த கவனம் எடுத்து வருகிறார்.

அது மட்டுமின்றி படம் சம்பந்தப்பட்ட மொத்த வேலையையும் முடித்துவிட்டு ஆகஸ்ட் மாத இறுதியில் முழு படத்தையும் போட்டு பார்க்க அவர் முடிவு செய்து இருக்கிறார். அதிலும் ஐமேக்சில் படத்தை போட்டு பார்த்து ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால் செய்யவும் தயாரிப்பு தரப்பு தயாராக இருக்கிறதாம்.

Also read: லியோ படத்தால் மாமன்னனுக்கு ஏற்பட்ட சிக்கல்.. விஜய்க்கு மட்டும் நடக்கும் அநியாயம்

இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக கையாண்டு வரும் லோகேஷ் இதுவரை இல்லாத அளவுக்கு ஆரவாரத்தோடு படத்தை வெளியிடுவதற்கும் மாஸ்டர் பிளான் போட்டு வருகிறாராம். அந்த வகையில் ஜெயிலர் படத்தை ஓரம் கட்டுவதற்கு பட குழுவும் சத்தம் இல்லாமல் தயாராகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது. தற்போது இந்த இரண்டு படங்களும் தான் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த போட்டா போட்டியில் எந்த படம் வசூல் சாதனை படைக்கும் என இருதரப்பு ரசிகர்களும் தற்போது ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Also read: நா ரெடியா பாடல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த லியோ பட குழு.. புலி பதுங்குறது பாயிறதுக்கு தான்

Trending News