வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

லியோ படப்பிடிப்பில் கடுப்பான லோகேஷ்.. விஜய்யிடம் ஸ்டிரிக்டா போட்ட கண்டிஷன்

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படம் கடந்த இரண்டு மாதங்களுக்குள் முதற்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் முடித்து விட்டார்கள். அடுத்த கட்ட படப்பிடிப்பை தற்போது லியோ பட குழுவினர் சென்னையில் பிரசாத் ஸ்டூடியோவில் செட் போட்டு நடத்தி வருகின்றனர். இதை தெரிந்து கொண்ட விஜய்யின் ரசிகர்கள் அவரை பார்ப்பதற்காக எப்பொழுதும் அந்த இடத்திலேயே சுற்றி வருகிறார்கள்.

அத்துடன் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு உள்ளேயே சென்று எப்படியாவது அவரை பார்த்து விட வேண்டும் என்று முயற்சியுடன் தொந்தரவு செய்து வருகிறார்கள். இது லியோ படபிடிப்பிற்கு மிகவும் இடையூறாக இருந்து வருகிறது. இதனால் இப்படத்தின் சீக்ரெட் ஆன சில விஷயங்களும் வெளிவர வாய்ப்பு இருக்கிறது என்பதற்காக லோகேஷ் மிகவும் டென்ஷனில் இருக்கிறார்.

Also read: லியோ படப்பிடிப்புக்கு சைலண்டாக வரும் தனுஷ்.. ஒருவேளை அந்த கதாபாத்திரம் போல் இருக்குமா?

அது மட்டுமில்லாமல் விஜய்யின் கார் வரும்போதெல்லாம் அந்த காரை பின்பற்றி செல்கிறார்கள். அத்துடன் லோகேஷ் காரையும் தொடர்ந்து சென்று காரை கைகளால் தட்டி செல்ஃபி எடுத்துக்கலாமா என்று கேட்டு அவர்களுக்கு மிகவும் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தி வருகிறார்கள். இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் மொத்த பேரும் குழம்பி வருகிறார்கள்.

எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் கூட்டத்தை கூட்டிக்கொண்டு அந்த இடத்தையே வேற மாதிரியாக மாற்றி படப்பிடிப்பை சரியாக செய்ய முடியாமல் தொடர்ச்சியாகவே விஜய்யின் ரசிகர்கள் தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். ஆனால் விஜய் ஏற்கனவே லோகேஷ் இடம் காஷ்மீரில் படப்பிடிப்பை முடித்த பின்னர் இதற்கு அடுத்து எல்லா ஷூட்டிங்கும் சென்னையிலே வைத்துக் கொள்ளலாம் என்று கூறி இருக்கிறார்.

Also read: தளபதிக்கு பெரும் தலைவலி கொடுக்கும் லியோ பட சூட்டிங் .. மனக்கஷ்டத்தில் விஜய் எடுத்த முடிவு

ஏனென்றால் அப்பொழுதுதான் இங்குள்ள தொழிலாளர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார். அதனால் தான் லியோ படப்பிடிப்பிற்கு சென்னையில் செட் போட்டு இங்குள்ள தொழிலாளர்களை வைத்து வேலை நடக்கப்பட்டது. ஆனால் தற்போது நடக்கிற இந்த சூழ்நிலையை பார்த்து கடுப்பான லோகேஷ், விஜய்யிடம் எப்படியோ பேசி தயவு செய்து படப்பிடிப்பை ஹைதராபாத்தில் வைத்துக் கொள்ளலாம்.

அப்படி வைத்தால் மட்டும் தான் லியோ படபிடிப்பு சீக்கிரமாக முடியும் என்று ஸ்டிரிக்டா கண்டிஷன் போட்டுவிட்டார். பொதுவாக லோகேஷ் கோபமே படாதவர், அதிகமாக யாரிடமும் பேசாதவர், அனைவரையும் மதிக்க கூடியவர். அப்படிப்பட்ட அவரையே கோபப்பட வைத்திருக்கிறார்கள். விஜய்யின் ரசிகர்கள் செய்த செயலால் படக் குழுவினர் அனைவரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

Also read: விஜயால் லோகேஷ் கனகராஜுக்கு வந்த தலைவலி.. எல்லாத்தையும் தளபதி முடிவு செய்வதால் அதிருப்தியில் LCU

Trending News