Lokesh Kanagaraj Coolie: லோகேஷ் இயக்கியது அஞ்சு படமாக இருந்தாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவரும் விதமாக பார்ப்பவர்களை வெடவெடக்க செய்துவிட்டார். அந்த அளவிற்கு ஒரு படத்தை இன்னொரு படத்தோட முடிச்சு போட்டு யூகிக்க முடியாத அளவிற்கு கதையை கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.
கமலுக்கு விக்ரம், விஜய்க்கு மாஸ்டர் லியோ படத்தைப் போல ரஜினிக்கும் ஒரு படத்தை வெற்றியாக கொடுக்க வேண்டும் என்று கூலி படத்துடன் இணைந்து இருக்கிறார். தற்போது ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி வேட்டையன் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.
லோகேஷ்க்கு மிகவும் தலைவலியை உண்டாக்கிய சம்பவம்
இப்படம் அக்டோபர் 10ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளிவர இருக்கிறது. இதற்கிடையில் லோகேஷ் இயக்கத்தில் ரஜினி கூலி படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இப்படம் எல்லா பக்கமும் தூக்கி கொண்டாடும் விதமாக மல்டி ஸ்டார் படமாக இருக்க வேண்டும் என்று ஆங்காங்கே முக்கிய நடிகர்களை வைத்து நடிக்க வைத்திருக்கிறார்.
அந்த வகையில் மலையாள நடிகர் சவுபின் சாகிர், தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா மற்றும் சத்யராஜ் சுருதிஹாசன் போன்ற பல ஆர்டிஸ்ட்கள் இதில் இணைந்து நடித்து வருகிறார்கள். ரஜினி மற்றும் நாகார்ஜுனா போன்ற சில ஹீரோக்களை வைத்து பஸ்ட் சிங்கிள் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.
ரஜினி மற்றும் லோகேஷின் காம்போ எந்த அளவிற்கு வெற்றிக் கூட்டணியாகவும், வசூலை எந்த அளவிற்கு அடையும் என்பதை பார்க்கும் விதமாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் நாகர்ஜுனா நடித்த காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் கசிந்திருக்கிறது.
இந்த வீடியோ மிகவும் வைரலானது. இது சம்பந்தமாக லோகேஷ் அவருடைய மன வேதனையை வெளிப்படுத்தும் விதமாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதாவது ரெக்கார்ட் செய்த ஒரு படப்பிடிப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் பலருடைய இரண்டு மாத உழைப்பு வீண் போய்விட்டது.
இதனால் ஒட்டுமொத்த அனுபவத்தையும் கெடுக்கும் விதமாக இது போன்ற செயல்களில் இனி யாரும் ஈடுபட வேண்டாம் என்று அனைவரையும் மிக தாழ்மையுடன் கேட்டுக் கொண்டு அவருடைய மன வேதனையை கொட்டி தீர்த்து இருக்கிறார்.
பொதுவா லோகேஷ் இயக்கும் படங்கள் வருவதற்கு முன் எந்த மாதிரியாக இருக்கும் என்று யூகிக்க முடியாத அளவிற்கு தான் வித்தியாசமான காட்சிகளுடன் எதிர்பாராத விஷயங்களை கொண்டு வருவார். ஆனால் தற்போதைய கூலி படத்திலிருந்து மிக முக்கியமான காட்சி ஒன்று வெளியாயிருக்கிறது என்று தெரிந்ததும் லோகேஷால் இந்த வேதனையை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கடந்த இரண்டு மாதமாக பொத்தி பொத்தி வைத்த பொக்கிஷத்தை ஒரு நிமிஷத்தில் தூள் தூளாக்கிய இணை வாசிகளுக்கு வேண்டுகோள் வைக்கும் விதமாக இனி இதே மாதிரி ஒரு விஷயத்தை யாரும் செய்ய வேண்டாம் என்று வேதனையுடன் பதிவிட்டு இருக்கிறார்.
- Nelson, Lokesh Kanagaraj: வாயை பிளக்க வைக்கும் நெல்சன், லோகேஷ் சம்பளம்
- கட்டப்பாவுக்கு லோகேஷ் கொடுத்த கேரக்டர்
- லோகேஷ் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கன்னட ஸ்டார்